வள்ளலாரின் கருணையுள்ளம்
வள்ளலாரின் கருணையுள்ளம் ஓரறிவு உயிர்களின் வாட்டத்தைக் காணுகின்றது தாளாது வாடுகின்றது இவ்வாறு ஓரறிவுயிர்களின் வாட்டத்தையே காணச் சகிக்காத அவ்வருள்மிகு உள்ளம் ஆறறிவுயிர்களின் பசித் துன்பத்தைக் கண்டு எவ்வாறு சகிக்கும் எனவே,
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன் பசியினா லிளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறாதயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் துடித்தேன்
எனக் கவி கூறுகிறார்
தரைத் தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச்
சங்கடப் பாவியால் வருந்தி
என்னும் தொடரால் காணலாம்
இவ்வுலகில் வயோதிகர், கை , கால், முடம்பட்டோர் ஆகியோர்க்கு உணவிடுதல் தர்மமாகும் பறவையினங்கட்கும் உணவிடுதல் அறமாகும். உணவுண்ணும் முன்பு ஒரு பிடி சாதம் பறவைகட்கு இட்டு உண்ணுவது நமது முன்னோர் வழக்கம். அவ்வாறு காக்கைக்குக் குட ஒரு பருக்கையைக் கொடுக்காது உண்ணுவது கொடியவர்களின் கொடுஞ்செயலாகும் இக்கருத்தை வள்ளலார்
கூவு காக்கைக்குச் சோற்றிலோர் பொருக்குங்
கொடுக்க நேர்ந்திடாக் கொடியரிற் கொடியேன்
என்கின்றார்
இவ்வுலகில் சத்துள்ள மிக உயர்ந்த உணவுவகைகள் வறியவர்கட்குத் தேவையில்லை. பசியாற்ற எளிய பனம்பழம் கிடைத்தாலும் போதும். பனம்பழம் கூடக் கிடைக்காத காலத்திலும் சோறு கிடைக்காத காலத்திலும் பசியாற்றக் கூழ் கிடைத்தால் கூடப் போதும் எனப் பசித்தோர் எண்ணுவதும் உண்டு இவைகளை
பனம்பழமே யெனினும் பசிதவிர்த்தல் போதும்
பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினியீர்
என்னும் கவிதை வரிகளால் தெரிந்துகொள்ளலாம்.
இத்தகையா கொடிய பசிப்பிணியைப் போக்கும் செயலுக்காக வடலூரில் 1867 இல் தருமச்சாலையை வள்ளலார் நிறுவினார். எந்த ஒரு திட்டமும் வெற்றி பெற வேண்டுமானால் மக்களின் பேராதரவு இருத்தல் வேண்டும் வள்ளலாரால் இத்திட்டம் முக்காலம்மும் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக மக்கள் சக்தியை ஒன்று திரட்டினார். மக்களுக்காக உருவாக்கப்பட்ட இத்திட்டம் மக்களாலேயே காலமெல்லாம் நடத்தப்பட வேண்டுமென்று நினைத்தார்.
தயவு
Write a comment