மரணமிலாப் பெருவாழ்வு வாழும் வழி:
சன்மார்க்கம் ஒன்றே மரணமில்லாப் பெருவாழ்வை வாழ வைக்கும் ஒரே வழியாகும். சன்மார்க்கம் அல்லது பொதுவழி என்பது சாதி, மத பேதமற்ற வழியாகும். எவ்வுயிரையும்தம்முயிர் போல் எண்ணுவதை போதிப்பதே சன்மார்க்கமாகும். சாதி மத பேதங்களற்று அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுடன் உண்மை அன்பால் இறைவனை ( ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி) வழிபடுவதே சன்மார்க்க வழிபாடாகும். இரக்கம், தயவு, கருணை இவையே சன்மார்க்கத்தின் முக்கிய கருவியாகும். இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம் , ஆன்ம ஒழுக்கம் இவையே சன்மார்க்க வேதமாகும்.
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்ற திருவாச வரிகளில் இருந்து இறைவனின் திருவடியை அடைய ஆன்ம உருக்கம் அதாவது மாணிக்கவாசகரைப் போல் அழுது இறைவனை அடைதல் வேண்டும். இந்த நிலைப்பாடு உயர்ந்த ஞானியர்க்கும் இறைவனின் அருளை
அருளை பெற்றவர்க்கும் மட்டுமே கிடைக்கக் கூடிய பேறாகும். எனில் சாதாரண மனிதர்களான நாம் எவ்வாறு இறைவனது அருளை பெறக்கூடும் எனில், உயிர் இரக்கம் ஒன்றே ஆகும். அனைத்து உயிர்களூம் இறைவன் உறைந்திருக்கும் இடமே என்று அறிந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர் போன்றுய் எண்ணி இரக்கங்கொண்டு அன்பு செலுத்தி அவ்வுயிர்களின் துன்பத்தை துடைப்பதே ஜீவதயவு. இந்த ஜீவதயவை கொண்டே எல்லாம் வல்ல கடவுள் தயவினைப் பெற்று மரணமிலாப் பெருவாழ்வை அடைய முடியும்.
இத்தகைய உயர்ந்த உண்மை நெறியை காட்டு அதை வாழ்வாக வாழ்ந்தவரே வள்ளல் பெருமான் அவரது ஜீவதயவை ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையை இப்பாடலின் மூலம் அறியலாம்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றாரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோரென்
நேருறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்
என்பதன் மூலம் அன்பும் இரக்கமும் மனிதனின் இயற்கை குணம் என்று அறிவுருத்துகின்றார். மேலும் பசியால் வாடுவோர்க்கு உணடு கொடுத்து அவர்களின் துன்பத்தை போக்கி அவர்களை அரவணைப்பதே ஜீவகாருண்யமாகும். ஆனால் இன்றோ மனிதன் அன்பு, இரக்கம், என்றால் என்ன? என்று கேட்கும் நிலையிலுள்ளான். இதற்கு முக்கிய காரணம் சுயநலம் மட்டுமே. இந்த சுயநலத்தால் மனிதன் தன் இயற்கை குணங்களை மறந்து மனிதனை மனிதனே கொல்லும் மிருக வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கின்றான். எந்த இனமும் தங்கள் இனத்தைச் சேர்ந்த மற்றோர் உயிரை கொல்லாது. ஆனால் மனிதன் மட்டுமே சுயநல குணத்தால் இத்தகைய இழிசெயலை செய்கின்றான்.
2 Comments
T.G.Ramalingam
Bangalore 31/07/10
T.G.Ramalingam
Bangalore 31/07/10