சித்திவளாகம்
வடலூருக்கு அருகே மேட்டுக்குப்பத்தில் இருக்கிறது சித்திவளாகம் வள்ளலார் ஏற்றி வைத்த அனையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. வள்ளலார் சித்தி பெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து தியானம் செய்யலாம்.
தினமும் இங்கே திருவருட்பா பாடல்களை அன்பர்கள் பாடிப் பிரார்த்தனை செய்கின்றனர். மாதா மாதம் பூச நாட்களில் அன்னதானம், சிறப்பு வழிபாடும் நடைபெறுகின்றன.
தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையை ஜன்னல் வழியாகப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.
வள்ளலார்வரவழைத்த தீஞ்சுவைநீரோடை
சித்திவளாகத்திருமாளிகைக்குக் கிழக்குத் திசையில் சற்றுத் தூரத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது. வள்ளலாரைக் காணவருபவர்கள் அந்த ஓடையில் நீராடுவது வழக்கம். நீரோடையில் ஒரு முறை நீர் வற்றிவிட்டது. வள்ளலார் அங்கு சென்றார். தமது கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கி எழுந்து நிறைந்தது.
அது முதல் அந்த நீரோடை ‘ தீஞ்சுவை நீரோடை ‘ என அழைக்கப்படுகிறது. கோடைகாலத்திலும் நீர் வற்றுவதில்லை. அது மட்டுமல்ல, இந்த ஓடையில் குளித்தாலும் அதன் நீரைப் பருகினாலும் நோய்கள் நீங்குகின்றன.
வள்ளலார் கரம்பட்டதும் சாதாரண நீரோடை சக்தி வாய்ந்த நீரோடை ஆகிவிட்டது.
Write a comment