Vallalar Universal Mission Trust   ramnad......
துன்பங்கள் தீரும் வழிகள்

துன்பங்கள்தீரும்வழிகள்
தயவு
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
வள்ளலார்திவ்வியத்திருவடிகளேசரணம்.
எல்லாஉயிர்களும்இன்புற்றுவாழ்க.
பாகம் 1
துன்பம்எதனால்வருகின்றது?
வாழ்க்கையே ஒரு போராட்டம்.
மனித வாழ்க்கை. துன்பங்கள் நிறைந்தது. உலகில் கவலை இல்லாதவரைக் காண்பது அரிது.
வறுமை, வேலையின்மை, கடன் தொல்லை, வியாபாரத்தில் நட்டம், தொழில் பிரச்சனைகள், வம்பு வழக்குகள், வீண்பழிகள், குடும்பத்தில் குழப்பங்கள், தீராத வியாதிகள், விபத்துகள், அகால மரணம், குழந்தை பாக்கியமின்னை என விதவிதமான துன்பங்கள் மக்களை வாட்டி வதைக்கின்றன. இத்துன்பப் புயலிலிருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். துன்பங்களைத் தாங்க முடியாமல் சிலர் போதைக்கு அடிமையாகின்றனர்; சிலர் சித்தம் கலங்கி பைத்தியமாகின்றனர்; சிலர் தன்னையே மாய்த்துக் கொள்கின்றனர்.
இவ்வளவு கொடிய துன்பங்கள் எதனால் வருகின்றன என்று புரிந்து கொண்டு விட்டால், துன்பங்களிலிருந்து விடுபடும் வழிகளும் எளிதாகப் புரிந்து விடும்.
மக்கள் துன்பப்படுவது ஏன் என்பது குறித்து திருவருட்பிரகாச வள்ளலார் அருளிச் செய்துள்ள காரணங்களை இவண் உற்றுணர்க.
பசி, கொலை, பிணி, ஆபத்து, தாகம், பயம், இன்மை, இச்சை இவைகளால் மக்கள் மிகவும் துன்பப்படுவது ஏன்?
முன் தேகத்தில் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விரும்பாமல், கடின சித்தர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த ஜீவர்கள் ஆதலால், கடவுள் விதித்த அருளாணைப்படி பசி தாகம் பயம் முதலியவற்றால் மிகவும் துன்பப்படுகிறார்கள் என்று அறிய வேண்டும்.” – வள்ளலார்.
விளக்கம்: நாம் முன் பிறவிகளில் இரக்கம், கருணை, தயவு என்பது சிறிதும் இல்லாமல் பிற உயிர்களுக்குத் தீமை செய்வது துன்பம் விளைவித்தால் இப்பிறவியில் நமக்கு கடவுளின் அருள் ஆணைப்படி பல துன்பங்கள் வந்து அடைகின்றன.
அதாவது முன்பு நாம் உயிர்களுக்குச் செய்த துன்பம் இப்போது நம்மிடமே திரும்பி வந்து நம்மைத் துன்புறுத்துகின்றது.
மேலும் முன் பிறவிகளில் நாம் இரக்கச் சிந்தனையோடு தயவு செயல்களைச் செய்து பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாது நற்சிந்தனை, நற்செயல்களையே செய்து வந்திருப்போமானால் இப்போது நமக்குச் சந்தோஷம் தரும் நன்மைகள் வந்து சேர்ந்திருக்கும் என்பது தெளிவாகின்றது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் – என்பது முதுமொழி.
நாம் முன்பிறவிகளில் ஜீவகாருண்ய ஒழுக்கம் விரும்பாமல், துன்மார்க்கத்தில் நடந்து வந்ததால் இப்பிறவியில் மிகுந்த துன்பங்கள் வந்த சூழ்கின்றன என்று உணர வேண்டும்.
நமது ஒவ்வொரு எண்ணத்திற்கும், சொல்லுக்கும், செயலுக்கும் – ஒரு விளைவு நிச்சயம் உண்டு.
நமது மனத்தில் உதிக்கும் எண்ணங்கள், நமது நாவிலிருந்து வரும் சொற்கள் நமது செயல்கள் குற்றமற்றதாய், தூயதாய், பிற உயிர்களுக்கு நன்மைத் தருமாயின் – அது நல்வினை எனப்படும். அதுவே நன்மை என்றும் புண்ணியம் என்றும் அழைக்கப்படும்.
நமது எண்ணங்கள், சொற்கள், செயல்கள் குற்றமுடையதாய் பிற உயிர்களுக்குத் துன்பத்தைத் தரும் எனில் அது தீவினை எனப்படும். தீமை என்பதும் பாவம் என்பதும் அதுவேயாகும்.
புண்ணியமென்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் முயற்சிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும்.
பாவமென்பது ஆரம்பத்தில் சுகமாயும், பின் துக்கமாயும் இருக்கும்.
முன் பிறவிகளில் நாம் செய்த நல்வினை தீவினைகளின் தொகுப்பே விதி என்றும் ‘ஊழ்வினை’ என்றும் அழைக்கப்படுகின்றது.
நாம்செய்யும் பாவங்களே நமது துன்பங்களுக்குக் காரணங்களாகின்றன.
பாவங்களால் வருவதே துன்பங்கள்.
பாவங்கள் எவ்வாறு நம்மை வந்து அடைகின்றன?
பாவங்கள் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினால் அடையும்.
மனத்தினால்அடையும்பாவங்கள் 4
1. பிறர் மனைவியை/கணவனைத் தழுவ நினைத்தல்
2. பிறர் சொத்தைப் பறித்துக் கொள்ள நினைத்தல்
3. பிறருக்குத் தீங்கு செய்ய நினைத்தல்.
4. முடியாத காரியங்களை நினைத்து, அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமை அடைதல்.
வாக்கினால்அடையும்பாவங்கள்: 4
1. பொய் சொல்லல்
2. கோள் சொல்லல்
3. புறங்கூறல்
4. வீணுக்கு அழுதல்.
தேகத்தினால்அடையும்பாவங்கள்
1. பிறர் மனைவியை/ கணவனைத் தழுவுதல்
2. புசிக்கத்தகாத வேதவிரோத ஆகாரங்களைப் புசித்தல்
3. அன்னியர்களை இம்சை செய்தல்
4. தீங்கு செய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரம் செய்தல்.
உலகில் வழங்கப்படும் 43 பாவச் செயல்களை அருட்கடல் வள்ளலார் பட்டியலிட்டுக் காட்டுவதை இவன் காண்போம்.
இந்தப்பிறப்பில்லாவிட்டாலும்முற்பிறப்பிலே,
நல்லோர்மனத்தைநடுங்கச்செய்தேனோ!
வலியவழக்கிட்டுமானங்கெடுத்தேனோ!
தானங்கொடுப்போரைத்தடுத்துநின்றேனோ!
கலந்தசிநேகரைக்கலகஞ்செய்தேனோ!
மனமொத்தநட்புக்குவஞ்சகஞ்செய்தேனோ!
குடிவரிஉயர்த்திக்கொள்ளைகொண்டேனோ!
ஏழைகள்வயிறுஎரியச்செய்தேனோ!
தருமம்பாராதுதண்டஞ்செய்தேனோ!
மண்ணோரம்பேசிவாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலைசெய்வோர்க்குஉபகாரஞ்செய்தேனோ!
களவுசெய்வோர்க்குஉளவுசொன்னேனோ!
பொருளைஇச்சித்துப்பொய்சொன்னேனோ!
ஆசைகாட்டிமோசம்செய்தேனோ!
வரவுபோக்கொழியவழியடைத்தேனோ!
வேலையிட்டுக்கூலிகுறைத்தேனோ!
பசித்தோர்முகத்தைப்பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப்பிச்சைஇல்லையென்றேனோ!
கோள்சொல்லிக்குடும்பங்கலைத்தேனோ!
நட்டாற்றில்கையைநழுவவிட்டேனோ!
கலங்கிஒளித்தோரைக்காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக்கலந்திருந்தேனோ!
காவல்கொண்டிருந்தகன்னியையழித்தேனோ!
கணவன்வழிநிற்போரைக்கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக்களித்திருந்தேனோ!
குருவைவணங்கக்கூசிநின்றேனோ!
குருவின்காணிக்கைகொடுக்கமறந்தேனோ!
கற்றவர்தம்மைக்கடுகடுத்தேனோ!
பெரியோர்பாட்டிற்பிழைசொன்னேனோ!
பஷியைக்கூண்டில்பதைக்கஅடைத்தேனோ!
கன்றுக்குப்பாலூட்டாதுகட்டிவைத்தேனோ!
ஊன்சுவைஉண்டுஉடல்வளர்த்தேனோ!
கல்லும்நெல்லுங்கலந்துவிற்றேனோ!
அன்புடையவர்க்குத்துன்பஞ்செய்தேனோ!
குடிக்கின்றநீருள்ளகுளந்தூர்த்தேனோ!
வெய்யிலுக்கொதுங்கும்விருஷமழித்தேனோ!
பகைகொண்டுஅயலோர்பயிரழித்தேனோ!
பொதுமண்டபத்தைப்போயிடித்தேனோ!
ஆலயக்கதவைஅடைத்துவைத்தேனோ!
சிவனடியாரைச்சீறிவைதேனோ!
தவஞ்செய்வோரைத்தாழ்வுசொன்னேனோ!
சுத்தஞானிகளைத்தூஷணஞ்செய்தேனோ!
தந்தைதாய்மொழியைத்தள்ளிநடந்தேனோ!
தெய்வமிகழ்ந்துசெருக்கடைந்தேனோ!
என்னபாவஞ்செய்தேனோ! இன்னதென்றறியேனே!
தயவு
ஆதாரம்: துன்பங்கள் தீரும் வழிகள் .