பொன்னாசை
பொன்செயல் வகையை உணர்த்தி என் உளத்தே
பொருந்திய மருந்தையென் பொருளை
ரசவாத வித்தையிலே தேர்ச்சி பெற்றிருந்த இராமலிங்கவள்ளலார் மருந்து தயாரிக்கவும் ஞானசபையை உருவாக்கவும் அந்த வித்தையைப் பயன்படுத்திக்கொண்டார்.
ரசவாதம் செய்யும்போது வள்ளலாருக்குத் துணைபுரிந்து வந்தவர் வேம்பு ஐயர் ஆவார். அம்பாபுரத்தைச் சேர்ந்தவர் அவர். வள்ளலார் ஏவியவற்றைச் செய்து வந்தார். வேம்பு ஐயர். இரும்பும் பித்தளையும் மூலிகைகளின் சேர்க்கையால் வெள்ளியாகவும் தங்கமாகவும் மின்னுவதைக் கண்டு, நாளடைவில் வேம்பு ஐயரின் உள்ளத்தில் ஆசை துளிர்விட்டது.
வள்ளலார் எவ்வகையான மூலிகைகளைப் பயன் படுத்துகிறார் எவ்வளவு நேரம் மூலிகைச் சாறுகளைக் காய்ச்சுகிறார் என்ற நுட்பங்களை ஊன்றி கவனித்து மனத்தில் பதிவு செய்து கொண்டார். ஆசை என்னும் வித்து உள்ளத்தில் விழுந்ததால், வாய்ப்பு கூடி வந்ததும் செடியாகி, மரமாகிவிடும். வேம்பு ஐயரும் அவ்வகையில் திட்டமிட்டார். வள்ளலார் வைத்திருந்த ரசவாத மருந்தை எவருமறியாமல் எடுத்தார். அம்மருந்தைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கி, விற்றுப் பெரும் செல்வந்தனாக வாழலாம் என்ற கனவுகளுடன் சொந்த ஊருக்குச் சென்றார்.
ரசவாத வித்தையில் தேர்ச்சி பெற்றிருக்கிறோம் என்ற மனத்துணிவுடன் மருந்தை, இரும்புத் துண்டில் தோய்த்து நெருப்பின்மீது வைத்தார். நெருப்பை நன்றாக ஊதும் போது மருந்தினால் ஏற்பட்ட புகை, வேம்பு ஐயரின் கண்களை எரியச் செய்தது.
கைகளால் கண்களைக் கசக்கிவிட்டு, இமைகளைத் திறந்தார், அவரால் எதையுமே பார்க்க முடியாதபடி கண்கள் குருடாகிவிட்டன. வள்ளலாரிடம் செல்லத் துணிவின்றி, பார்வையை மீண்டும் பெற பல மருத்துவர்களிடம் சென்றார். பலன் ஏதுமில்லை. கையிலிருந்த பொருள் கரைந்ததுதான் கண்ட பலன்.
வேம்பு ஐயரின் உள்ளத்தில் தாம் செய்த தவறு உறுத்திக்கொண்டே இருந்தது. முடிவில் வள்ளலாரிடமே சென்று தவறுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று தீர்மானித்தார். வள்ளலாரின் இருப்பிடம் சென்றார். அவர் தம் கால்களைப் பற்றிக் கொண்டு கதறினார். தாயுள்ளம் கொண்ட தயாபரரான வள்ளலார் வேம்பு ஐயரைத் தூக்கினார். தமது கையிலிருந்து செம்பு நீரை அவரது முகத்தில் தெளித்தார். உடனே இழந்த பார்வையை மீண்டும் ஐயர், தம்மெதிரே காட்சி தந்த வள்ளாரை தரிசித்து மகிழ்ந்தார். தம்மை மன்னித்து அருள் புரிந்த வள்ளாரைப் போற்றிப்பணிந்தார்.

Write a comment