Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
வள்ளல் பெருமானின் ஞான சரியை (15-28) பாடல்களுக்கு உரை விளக்கம்.

ஞான சரியை

முதல் 1-14 பாடல்களுக்கு திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள் எழுதிய உரை விளக்கம் ஏற்கனவே 15.8.2008 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 15-28 பாடல்களுக்கு சுவாமிகள் எழுதிய உரை விளக்கம் தற்போது வெளியிடப்படுகிறது.

உரை விளக்கம் (15-28 பாடல்களுக்கு)

15. பாடல்
சத்தியவே தாந்தமெலாம்
சித்தாந்த மெல்லாம்
தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும்
தனையுணர்தற் கரிதாய்
நித்தியசிற் சபைநடுவே
நிறைந்துநடம் புரியும்
நித்தபரி பூரணனைச்
சித்தசிகா மணியை
அத்தகையோர் பெரும்பதியை
அருமருந்தை அடியேன்
ஆவியையென் ஆவியிலே
அமர்ந்ததயா நிதியைச்
சித்தியெலாம் எனக்களித்த
சிவகதியை உலகீர்
சிந்தைசெய்து வாழ்த்துமினோ
நிந்தையெலாம் தவிர்ந்தே
சிற்சபை ஒன்றே நமது ஆண்டவர்க்கு, உண்மையான, என்றென்றும் விளங்குகின்ற கோயிலாய் இருக்கின்றதாம்.
இவ்வம்பலத்தின் நடுவிலே இருந்து கொண்டு, எங்கும் நிரம்பிய தன்னிலை காட்டும், தனிப்பெரு நடனம் புரிந்து கொண்டுள்ளளைர். அவர் நித்த பரிபூரணராக உள்ளளைராம். நித்தியராகவும், நிறைவுடையவராகவும் இருக்கின்றவர் ஒருவரே.
ஒருவர் தான் என்பது அந்த அருள்
அம்பலத்திலிருந்து, அருளளைலே
காண்கின்ற போது தான் உண்மையாக
விளங்கும்”
மற்றபடி சொல்லித் தெரிந்து கொள்ள முடியாதாம்.
அவர், சித்த சிகாமணி ஆவார். அவர், அற்புத சித்தர்களுக்கு எல்லாம், தனித் தலைமைப் பெரும்பதி என்பது குறிப்பு. அன்றியும், சித்தம் என்பது சலனமற்ற மனத்தின் தெளிவு நிலையாக இருக்கின்றதால், அத்தெளிவோடு நிலைத்துத் திருவருளை வேண்டி நின்றால் முடிவில் அருட்ஜோதிமணியாய் நமது ஆண்டவர் வெளிப்படுகின்றார். ஆதலின், இந்த அருùளளைளி மணியைச் சுத்த சிகாமணி என்று கூறலாம்.
அன்றியும், நல்ல யோகியரிடத்தில் விளைவு கொள்ளுகின்ற சித்த நாடியின் அந்தத்தில், தேஜோ மயமாய் வெளிப்படுகின்ற சிவஜோதிமணியே சித்த சிகாமணியென உள்ளதாம். இந்த மணியை அனுபவத்தில் பெற்றுக் கொள்கின்றவர்கள், யோக ஞான சித்திகள் பலவும் புரிவார்கள் என்ப, இந்த சித்த சிகாமணியையுற்று சித்தர்களுக்கெல்லாம் சிகாமணியாய் விளங்குகின்ற பலரும் போற்றும்படியாய் விளங்குகின்ற பெருமை உடையவர், நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
இந்த பதியை, சத்தியமாயுள்ள வேத வேதாந்தங்கள், சித்தாந்தங்கள் எல்லாம் விளக்கிக் கூறி, சுட்டிக் காட்ட எவ்வளவோ காலமாக முயன்று கொண்டு தான் இருக்கின்றன. அவைகளில் எல்லாம் தன்னைச் சிறிதும் வழங்கிடவில்லை. நமது அருட்பெரும்பதி. வேதாந்தமும், சித்தாந்தமும் மனிதனைப் பகுத்தறிவின் எல்லையில் நிறுத்திப் பாவனை செய்ய விட்டு விட்டுத் தயங்கி நிற்கின்றன.
அதற்கு மேல் அவற்றால் என்ன செய்ய முடியும்! அந்தப் பாவனா சமாதிப் பழக்கத்தாலும் ஆகம தந்திர முறைகளளைலும், நித்த பரம்பொருளை ஓரளவு உணர்ந்து அடைந்து, ஓரளவு சித்தி கொண்டும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் வாழ்ந்தொழிய முடிந்ததாம்.
அருட் பூரணம் என்னும் சுத்த சன்மார்க்கம் ஒன்றினால் தான் நிலையான நித்தியானந்த வாழ்வு பெற முடியும் என இந்நாள் திருவருளளைல் உணர்த்தப்படுகின்றோம். அப்பேர்ப்பட்ட அருட்பெரும் பதியை, அருமருந்தாய், அருள் அமுதமாக உள்ள ஒன்றையே, என்னுடைய உயிராகக் கொண்டுள்ளதாய்த் திருவருளளைல் அறிவிக்கப்படுகின்றனன்.
மேலும் எனது ஆன்மாவாயிருக்கும் அது எல்லாம், வல்ல தயாநிதியாகவும் இருக்கக் காண்கின்றேன். அதுவே என்றன் தயா ஜோதி நிதியாய் விளங்கி, சித்தி எல்லாம் வழங்குகின்ற சிவநிலையாகவும் கண்டு கொள்கின்றேன்.
நீங்களும் இந்த பதி அருளைப் பெற்று, பரமானந்த வாழ்வு அடைந்திடலாம் வாருங்கள். உலகில் பிறரை நிந்தித்தலை விட்டுவிடுங்கள், எங்கும் விளங்கும் இறைவனையும் அவனது அருட்சக்திச் செயலையும் கண்டு கண்டு வந்தனையே புரியுங்கள்.
முதலில் அம்பல முன் வந்து நின்று ஆண்டவர் பெருமையை நினைவு கூறுங்கள், சிந்தனை செய்யுங்கள், செய்து கொண்டேயிருங்கள். அன்பினால் கன்மனம் கரைந்து நெகிழும்போது, ஆண்டவர் உண்மை வெளிப்படுவது சத்தியம்.”
வேதாகமங்களளைலும், காண்டற்கும் கண்டு காட்டற்கும், அரிதாகிய கருணை வள்ளலை அருட் கண்ணாரக் கண்டு கொள்வீர்கள். கண்டு, உள்ளூறக் கொண்டு வாழ்விலே அமைத்துக் கொண்டு சச்சிதானந்தமாய்த் திகழலாம்.
சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்பார்கள். எப்படியிருக்க முடியும்?
வெறுஞ்சிந்தனை செய்து கொண்டிருந்தால் அருட் செயல் புரிய முடியாதுபோம். கடவுள், இடையறாது ஐந்தொழில் புரிந்து கொண்டேயிருப்பவரவார், “அவரை உளத்திற் கொண்டு மறவாது இருப்பதோடு, ஜீவ கருணைச் செயலும் புரிந்து கொண்டே இருப்பதுதான், உடல் உயிரோடு விளங்குவதற்கும் உணர்வில் கடவுட் சிந்தனை ஓங்குவதற்கும் உற்ற உபாயமாகும்.
ஆகையால், சித்தத்தில் செம்பொருட் சிந்தனை மாறாதிருக்க வேண்டும் என்றால் சுத்த சத்விசாரத்தால் அக நிலையிற் பிறழாதிருந்து கொண்டு, அருட் செயலில் ஈடுபட்டுவிட்டால் திருவருள் தடைபடாது அனகத்தே பெருகிக் கொண்டேயிருக்கும்.
அப்போதுதான் சிந்தித்து இருக்கவும், அபாயம் ஏதும் உண்டாகாது வாழ்ந்திடவும், இன்பிலே என்றென்றும் விளங்கிடவும் கூடும்.
சிவகதி என்றது அருள் அல்லது தயா உண்மையைக் கொண்டதேயாம். கடவுள் தயவே நமக்கு ஜீவ தயவாய் விளங்கி, சுத்த தயா இன்ப நிலைக்கு ஏற்றி வைக்கவுள்ளதாம்.
கதி என்றால், வழி, புகலிடம், நிலை துணை முதலியனவாகப் பொருள்படம். இவை யாவுமாய் இருப்பது கடவுள் தயவு ஒன்றே. ஆதலின் சிவகதியைத் தயா கதியாகக் கொள்ளுதல் பொருந்துவதே.
அன்றியும், தயா இன்ப நிலை பேறே, எவரும் தயங்காது ஏற்கக் கூடிய ஒன்றாய் இருத்தலின், சைவ சமய மதம் குறிக்காத இச் சச்சிதானந்த தயவை ஏற்போமாக.
16. பாடல்
நிந்தையிலார் நெஞ்சகத்தே
நிறைந்த பெரும்தகையை
நிலையனைத்தும் காட்டியருள்
நிலையளித்த குருவை
எந்தையையென் தனித்தாயை
என்னிருகண் மணியை
என்னுயிரை என்னுணர்வை
என்அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்தினிக்கும்
தெள்ளமுதை அனைத்தும்
செய்யவல்ல தனித்தலைமைச்
சிவபதியை உலகீர்
முந்தைமல இருட்டொழிய
முன்னுமினோ கரண
முடுக்கொழித்துக் கடைமரண
நடுக்கொழித்து முயன்றே.
அன்பு முந்து சித்தையே ஆலயங்கொள் ஆண்டவர், நிந்தையிலா நெஞ்சகத்தில் நிறைந்த பெருந்தகையே ஆவார். அவரே உண்மைக் குருவாய் உள்ளத்தவிசில் எழுந்தருளி உபதேசஞ் செய்து, கண்டு கொள்ள வேண்டியதை எல்லாம் காட்டி, மேனிலையில் கூட்டி வைக்கின்றார்.
அவரே எனக்கு உண்மைத் தந்தை ஆவார். அவரே எனக்கு ஒப்பற்ற தாயும் ஆவார். அவரே எனது இரண்டு கண்ணினுண் மணியாய் இருந்து, யாவையும் கண்டு கொள்ளச் செய்கின்றார்.
மேலும், “அவரே எனது, உயிராகவும், அவ்வுயிரில் விளைகின்ற மெய்யுணர்வாகவும், அவ்வுணர்வால் பெறப்படுகின்ற அறிவாகவும், அவ்வறிவுக்கான அருள் ஒளியாகவும் இருக்கின்றார்”.
அவ்வருள் நிறையுணர்வை ஓர் சிந்தைக் கடலாகிக், அதினின்று கடைந்தெடுக்கப்பட்ட தெள்ளமுதாகவும் விளங்குகின்றார். அவ்வமுதம் ஒப்பற்ற அருட்சுவையை ஊட்டுகின்றது, எனது சித்தத்திலே. அந்த அருட்ஜோதி வண்ண அமுத மயமான பதியே எல்லாம் செய்ய வல்ல தனித்தலைமைச் சிறப்பாக சிவபதியாக, யான் கண்டு கொண்டுள்úளன்.
சிவம் என்றாலே நின்மலமானதாம். அச்சிவபதியே சுத்த நிலையில், தன் அருளையே சூழக்கொண்டுள்ளளைர். அந்த அருள் உண்மை அபக்குவத்தில் விளங்குவதில்லை. மருளளைக. இருளளைக மாற்ற தோற்றத்தோடு காணப்படுகின்றதாம். மலபாசச் சார்புடைய பசுவாக தோற்றுகின்ற ஜீவன், உண்மையில் அருùளளைளி சூழ் சிவமே என்பது சுத்த நிலை அனுபவம்.
மருளளைகிய மயக்க நிலையை விட்டு, அருள் முயற்சியில் இருங்கள். மனோகரணம் என்னும் இருண்ட ஒரு மூலையிலே முடுக்கப்பட்டு, முடங்கிக் கிடக்கின்றவர்கúள, அருளை முன்னுங்கள் (கருதி எழுந்து முன் வாருங்கள்). அப்படி உள்விழித்து எழுதலாலே, கரணமுடுக்கு ஒழியும், கேவலாதிகார மரணமும் நீங்கும்.
கேவலம் என்பது மறதி. அதற்கு எதிர்ச்சொல் சகலம்; நினைப்பு என்று பொருள்படும். அருட்ஜோதிபதி ஒன்றே உண்மையில் இருக்கின்றது என்றதை சுத்த சத்விசாரத்தால் தான் கண்டு கொள்ள முடியும் என்று அறிந்து கொண்டுள்úளளைம், இந்த உண்மையை மறத்தல் கேவலம். மறந்து நாம் என்றும் பிறர் என்றும் உலகை நோக்குதல் சகலம். உண்மையை உள்ளபடி அறிந்து, அதனை மறவாது நினையாது நிற்றல் சுத்த நிலையாம். இந்நிலையே கேவலதிகார மரணமற்ற நிலையாம்.
இந்நிலையை, முதலில் சத்விசாரத்தால் கண்டு நிற்க வேண்டும். இதுவே இராப்பகலற்ற, பிறப்பு இறப்பு அற்ற இடமாம், இதிலிருந்து கொண்டு அனக தயா நிறைவு பெறும் போது, தேகமும் சுத்த நிலை பெற்று மரணமில்லாப் பெரு வாழ்வு சித்திப்பதாம். இதுவே சுத்த சன்மார்க்க சாத்தியானுபவமாம்.
அருட்குருவை அடைந்தால் தான் அருள் நிலை அனுபவம் ஆகிய இறவாப் பேரின்ப வாழ்வு சித்திக்கும் இந்த அருட்குருவை புறஉலகில் எங்கும் கண்டு கொள்ள முடியாதாம் குருவென்றாலே அறியாமையைப் போக்கி, அறிவு உண்மையைக் காட்டுகின்றவர் என்றே பொருள்படும்.
அப்படிச் செய்கின்றவர்கள் உலகில் பலராக இருக்கின்றார்கள் என்பது உலகியலார் கருத்து. அது ஓரளவு உண்மைதான். அந்த உலக குருக்களளைல் சில பல உண்மைகளை அறிந்து கொள்கின்றதும் மெய்தான். ஆதலால், அன்னவர்பால் அன்புப் பணிவுடனிருந்து அறிவு விளக்கம் பெறுதலும் நன்றே.
ஆனாலும், அவர்கள் ஓர் எல்லை வரைதான் பிறரை ஏற்றி விட முடியும். அதற்கு மேல் விசார ஞானத்தால் அகவுலகில் அருட் ஜோதியாம் குருவைக் கண்டு கொள்வோமெனில் ஏறாத நிலை மிசை ஏறி, மரணமிலாப் பெருநிலையில் திகழலாம். இந்த அருட்ஜோதி கருவே எல்லோருக்கும் உண்மைக்குரு. என்றும் உடனிருந்து காண்பரியன எல்லசம் காட்டியும், பெறற்கரியன எல்லாம் பெறுவித்து விளங்கிடச் செய்வார்.
இவ்வண்ணம் பிற எந்தக் குருவால் செய்ய முடியும்? இந்த குருவையே ஒவ்வொருவரும் தம் சொந்த குருவாகக் கண்டு, அடைந்துவிட்டால், அவரே நிலையனைத்தும் காட்டி அருணிலை அளிப்பார். அந்நிலையே சுத்த சுகானந்த நித்திய பூரண நிலையாகும்.
17. பாடல்
முயன்றுலகில் பயனடையா
மூடமத மனைத்தும்
முடுகிஅழிந் திடவுமொரு
மோசமும்இல் லாதே
இயன்றவொரு சன்மார்க்கம்
எங்கும்நிலை பெறவும்
எம்மிறைவன் எழுந்தருளல்
இதுதருணம் கண்டீர்
துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல்
இறந்தவர்கள் எல்லாம்
தோன்றஎழு கின்றதிது
தொடங்கிநிகழ்ந் திடுநீர்
பயின்றறிய விரைந்துவம்மின்
படியாத படிப்பைப்
படித்திடலாம் உணர்ந்திடலாம்
பற்றிடலாம் சுகமே.
மதம் என்பதன் உண்மைக் கருத்தை உள்ளவாறு தெரிந்து கொண்டால், எல்லோருக்கும் நல்லதாம்.
மதி என்றது, சந்திரன், அறிவு என இரு பொருள்படும். வானொளிர் சந்திர சக்தியால் உலகப் பொருள்களில், உயிர்களில் அமுத சத்துக்கள் விளைவு கொள்கின்றன. இந்த சத்துக்கúள அகப்புற விளக்கத்திற்கும் இனவிருத்திகளுக்கும் உதவுகின்றனவாம்.
இவ்வாறாக, மனிதனில் இவை, மதமும் மதியுமாய் விளைந்து பெருகுகின்றனவாம். உடலில் விளை மதசத்து இனவிருத்திக்கும், உயிரில் விளை மதசத்து, மதி என்னும் அறிவுவிளக்கம் செய்வதற்கும் என்று அறிவோம்.
ஆகவே “ஆன்ம சத்தென்னும் மெய்யறிவு தான் உண்மை மதமாக உள்ளதாம்”. ஆனால், அந்த மெய்யறிவு ஆன்ம அறிவாக மட்டும் இதுவரை இருந்து வந்ததால் அந்த ஆன்மக் காட்சியில் கண்ட பலப் பலவாகிய கற்பனா விளக்க மதங்கள், சமயங்கள் மலிந்துவிட்டன.
ஆன்மாவின் உள்ளிருந்த அருட் பெரும் சக்தி வெளிப்படாது இருந்த காரணத்தால், மூடுண்டு பொய்மையே புறந்திகழ்ந்து கொண்டு இருந்ததால், அருள் விளக்கமாம் உண்மை மதம் வெளிப்படாதிருந்ததாம்.
பேரறிவாளர்களளைல், பெருந்தவ முயற்சிகளளைல் கண்டு உரைக்கப்பட்ட மதங்கள் யாவும் மூட மதங்கúளயாம். அதாவது, கடவுள் உண்மை மூடுண்டு, மறைபட்டுக் கிடந்த கருத்துக் குவியல்கúள, மூடமதக் கொள்கைகள் என கூறப்படுகின்றன.
அந்த மூட மதங்களளைல் உலகிற்கு மெய்ப்பயன் உண்டாகவில்லை. அவற்றைக் கொண்டு எவ்வளவோ பாடுபட்டும் முடிவில் பெரும் பயனின்றிக் கெடவே கண்டோம். பழையனவற்றை மூடமுண்டதாகக் கூறினதால், அவற்றை அவமதித்ததாகக் கொள்ளக் கூடாது.
அந்தக் காலத்தில் கடவுளளைன்மா அணுத்துவமாய்த் தன் சக்தியைக் கை மண்ணளவு வெளியில் காட்டி உலகளவை உள் மறைத்து வைத்துக் கொண்டிருந்தது. அங்ஙனம் வெளிப்பட்டிருந்த சிறிதளவு ஆன்ம சக்தியால் இயற்றப் பெற்ற அற்புதங்களும், மதங்களும் மன்பதையை ஓளவு ஆட்கொண்டிருந்தன.
அவற்றால் நேர்ந்துள்ள பயன், இன்றைய கலக்கம் நிறை உலக நிலையேயாம். இப்பொழுது ஆன்மா அணுத்துவ நிலையினின்று அருட் பூரணத்தால் மலர்ந்து அருளமுத சாரத்தை வழங்குகின்றதாம். இதுவே சுத்த சன்மார்க்கம் என்னும் உண்மை மதமாகி உலவாப் பேரின்பம் நல்க உள்ளதாம்.
ஆகவேதான், நம் பதி, அம்மூட மதங்கள் அனைத்தும் முடுகி அழிந்திட, விரைந்து ஒழிந்திட, சஙகற்பஞ் செய்து கொண்டுள்ளளைர். இத்தோடு, இயன்ற ஒரு சன்மார்க்கம், இயற்கை உண்மையாகவும், எவர்க்கும் பொருத்தமானதாகவும் இருக்கும், ஓர் ஒப்பற்ற சுத்த சன்மார்க்கத்தை எங்கும் தோன்றி நிலைபெறச் செய்ய வேண்டி இப்பொழுதே இங்கு எழுந்தருளுகின்றார். இது அதற்கு உற்ற தருணமாக அமைந்துள்ளது.
இவ்விடத்தில், இது முதலாக, இறந்தவர்கள் எழுப்பப்படுவார்கள். அதாவது, இதுகாறும் செயலறக் கிடந்த ஆன்மாக்கள் அருùளளைளியோடு அகவுலகில் முதலில் எழுப்பப்படுவார்கள்.”
தூக்கத்திலிருந்து எழுந்தவன், தனது கனவுலகை விட்டு நனவுலகத்திற்கு வந்ததும், முன்னது பொய் என்று கண்டு கொள்கின்றான்; ஜாக்கிர உலகில் நல்ல வாழ்வை அனுபவிக்கின்றான்.
இதே போல, “ஆன்ம விழிப்படைந்து, அகவுலகில் எழுந்தவன் மாயா உலக நிலை கடந்து, அருட் ஜோதிமயக் காட்சியோடு ஆனந்தச் சூழலில் திகழக் காண்கின்றான்”.
இந்நிலை வாழ்வு அகமிருந்து மலர்ந்து நுகரப்படுவதால், இத்தருணமே வந்து சேரக் கடவீர்கள். இந்த அருள்மதம் வெற்றுப் படிப்பாலும், பாடம் பண்ணி விரிவுரை செய்து விடுவதாலும், புற வழிபாட்டு முறைகளளைலும் பயன் அளித்து விடாது.
சத்விசாரத்தால் உள் உணர்ந்து தயா ஒழுக்கத்தோடு இருந்தால்தான் அகத்தே வெளிப்படும். இப்படிச் செய்திருத்தல் தான், “பயின்றறிதல்” என ஈண்டு குறிக்கப்படுகின்றதாம். இப்பயின்ற அறிவால் தான், படியாத படிப்பைப் படித்திடலாம்; கல்லாத கல்வியைக் கற்றிடலாம். ஓதாதுணரலாம். உணர்ந்து, சுகநிலை பேற்றையும் அடைந்திடலாம், என்று உறுதி கூறப்படுகின்றது.
சுகம் - வாழ்க்கையின் அனுபவப் பயனே இதனைக் கற்று பெறுதல் கூடாது. ஒரு பொருளின் சுவையை உண்டு காணல் போன்று, சுகத்தை வாழ்ந்து அனுபவிப்பதே முறையாகும்.
18. பாடல்
சுகமறியீர் துன்பமொன்றே
துணிந்தறிந்தீர் உலகீர்
சூதறிந்தீர் வாதறிந்தீர்
தூய்மையறிந் திலிரே
இகமறியீர் பரமறியீர்
என்னேநும் கருத்தீ(து)
என்புரிவீர் மரணம்வரில்
எங்குறுவீர் அந்தோ!
அகமறியீர் அனகமறிந்(து)
அழியாத ஞான
அமுதவடிவம் பெறலாம்
அடைந்திடுமின் ஈண்டே
முகமறியார் போலிருந்தீர்
என்னையறி யீரோ
முத்தரெலாம் போற்றுமருட்
சித்தர்மகன் நானே.
உண்மை அறிந்து, உயர் ஒழுக்கம் பூண்டு, நல்ல வாழ்வில் தழைத்துப் பேரின்பமுற வேண்டியது, ஒவ்வொருவருடைய கடமையாய் இருக்க, உண்மையைச் சிறிதும் அறிந்து கொள்ளளைமல் துன்ப வாழ்வில் தொல்லைபட்டுக் கொண்டு கிடத்தல் ஏனோ? என மிக உருக்கத்தோடு இரங்கிக் கூறுகின்றார் நம் வள்ளல் பெருமான்.
சுகம் - உண்மையான ஆன்ம சுகம், அதனினும் மிக்கதாய, ஒப்புயர்வற்ற அருட்பெருஞ்சுகம் என்பது யாது என்று தெரிந்துகொள்ளவும், தெரிந்து கொண்டு அடையவும் முயலுகின்றீர்களில்லை.
துன்பம் மட்டும் பட்டுக்கொண்டே இருக்கத் துணிந்து விட்டிருக்கின்றீர்கள் போலும். அறியாமையில் விளைகின்ற அற்பசுகம் கூட துன்பமாகத் தான் முடிகின்றது உங்களுக்கு.
அன்றியும் நீங்கள் நன்றாகச் சூதறிந்து கொண்டுள்ளீர்கள். அதாவது, பொய், ஏமாற்றுவித்தையில் தேர்ச்சி பெற்றிருக்கின்றீர்கள். வாதறிவீர்கள்; வம்பு வழக்காகிய வாதமும், வீண் விதண்டாவாதமும், கலைப்போட்டி விவாதமும் அறிந்திருக்கலாம். ஒரு வேளை யோக கர்ம வாதசித்தியால் உலகை மயங்கச் செய்ய வல்ல ஆற்றலைக் கூட பெற்றிருக்கலாம். இவற்றாலெல்லாம் கடவுளரின் தூய அருள் கிட்டுவதாய் இல்லையே!
அன்புப் பெருக்கால், ஆன்ம நெகிழ்ச்சியால், “உள்ளத் தூய்மை உண்டானால் தான்” அருùளளைளி கிடைக்கும். ஆதலின் அந்தத் தூய்மையை அறிந்திலீரே என்று, இரக்கப்படுகின்றார்.
மேலும் இகம் அறியீர் என்கின்றார் இகமாவது இவ்வுலக இயல்பும், வாழ்க்கை முறையும், இவைகளுக்கு ஆதரவாய் இருந்து, உதவுகின்ற கடவுட் செயலும் கொண்டதாம்.
இவ்வளவையும் உள்ளபடி அறிந்து கொண்டால் இம்மையில் எம்மையும் கண்டு இன்புறலாகும். இம்மை உண்மையை அறியாதபோது, இக ரகசியத்தைத் தெரிந்து கொள்ளளைதபோது, பரமாகிய மேல் நிலை உண்மையை, கடவுள் தத்துவ இரகசியத்தை எப்படிக் கண்டு கொள்ள முடியும்? ஆகையால் பரம் அறியீர் என்றும் குறிக்கின்றார்.
இங்ஙனம் அறியாமையிலே உழன்று கொண்டு கிடக்கும் உங்கள் கருத்துத்தான் யாதோ? உங்கள் எண்ணம் என்ன விபரீதமாய் இருக்கின்றது! என இரக்க வியப்பு எய்துகின்றார். பின்னர், மரணம் வரும் போது என்ன செய்யப் போகிறீர்கள்? பாதுகாப்புக்கு எங்கே போவீர்கள்? அந்தோ பரிதாபம், என பரிதவிக்கின்றார்.
நீங்கள் மரணத்தை எதிர்த்துப் போராடினாலும் சரி, சும்மா இருந்தாலும் சரி, அல்லது இன்முகத்தோடு வரவேற்றாலும் சரி, நீங்கள் பெறப்போவது தோல்வியே மரணமென்னும் எமதர்மனுக்கே வெற்றி உண்டாம்.
அப்படியானால் வேறு என்ன செய்வோம்? என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்பீர்களளையின் “நீங்கள் முதலில் அக உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்”. அவ்வக உண்மை தான் யாதோவெனில், அது அருட் பெரும் கடவுள் ஆன்மாவாய் இருக்கின்றது. அந் நிலையில் அது நீங்களளைகவே இருக்கின்றீர்கள்.
ஆகையால், நீங்கள் புறநிலைப் பற்றை, தேகப் பற்றை விட்டு விட்டு அகத்தில் அதுவாகிப் பொருந்தி வாழ்தல் வேண்டியுள்ளதாம். அப்படி வாழ்தலே அகமறிந்து அதிலிருந்து, அனக முற வாழ்வதாகும்.
அப்படி வாழ்ந்தால், அகமிருக்கும் அருட் ஜோதியே, அருளமுதாய் நிரம்பிப் புறதேக நிலையையே அருள் வண்ணமாய் மாற்றி அமைத்துவிடுவதாம்.
ஆகையால் நானிருக்கும் இவ்விடத்திற்கு வந்து சேருங்கள், நான் வேறு யாரோவென எண்ணிக் கொண்டு, தெரியாத மூன்றாம் மனிதன் போல நினைத்துக் கொண்டு இருந்துவிடாதீர்கள். அப்படித்தான் இருந்தீர்கள், இது வரை.
நான் உங்களுள் நீங்களளையிருக்கின்றேன். முத்தர்களும் சித்தர்களும் போற்றிக் கொண்டுள்ள, அருட் பெருஞ்ஜோதி பதியோடு உடனாயிருக்கும் ஒருவனே நான். நான் எனது அருட் ஜோதித் தந்தையாரோடு ஒன்றி நிற்கின்றேன்”
சுத்த சத்விசாரத்தாலே, உங்களில் என்னை, என் தயா ஜோதித் தந்தையாருடன் கண்டு கொள்ளுங்கள். அந்தத் தயவினாலே உபசாந்த நிலை பெறுவீர்கள், இந்த நிலையில் மரணம் என்பதே இல்லையாகும். நித்தியானந்த வாழ்வே விளங்கும்.
பிண்டத்துயிர்கள் பொருந்தும் வகையும், பிண்டம் தன்னையே பிரியும் வகையும், பிரியா வகையும் தெரிந்தாய் பின்னையே” என்று மெய்யருள் வியப்பு மொழி பகர்கின்றார், பிறிதோரிடத்தில்.
அதாவது, அகத்திலிருந்து, உயிர்ச்சக்தி காரியப்படும் போது புறத்தேகம் வந்து சூழ்கின்றதும், அவ்வுயிர்ச்சக்தி அகத்தே சென்று ஒடுங்கும் போது, தேகம் பிரிவதால் மரணமும் உண்டாகின்றதாம்.
திருவருளளைலே அகநிலையுற்று, அவ்வருட் சக்தியையே அனகத்தில் விரித்து நிறைவுறச் செய்யப்படும் போது சூழற்ற உடம்பும், சுத்த அருட்ஜோதி உருவாகி நிலைத்து விளங்க நேருகின்றதாம். இது தான் தேகம் நீங்கா வகையாம்.
ஆகையால், நீங்கள் எல்லாம் எங்கும் போய் அலைந்து கொண்டு இருக்காதீர்கள், அவத்தைகள் பட்டு அழியாதீர்கள்; ஈண்டு இப்பொழுதே வந்து அடைமின்கள்.
19. பாடல்
நான்உரைக்கும் வார்த்தையெல்லாம்
நாயகன்தன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள்
நற்றருணம் இதுவே
வானுரைத்த மணிமன்றில்
நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவனருளளைல்
வரங்கùளலாம் பெறவே
தேனுரைக்கும் உளமினிக்க
எழுகின்றேன் நீவிர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின்
சித்திபெற லாகும்
ஏனுரைத்தே னிரக்கத்தால்
எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினை நீர்
தானடைதல் குறித்தே.
ஏதேதோ நான் அளந்தளந்து சொல்லிக் கொண்டுள்úளன் என எண்ணாதீர்கள். நான் உரைக்கின்ற ஒவ்வொரு சொல்லும் எனது தனித் தலைவனுடையதே ஆகும். அவனே, எனக்குள் இருந்து முதலில் உணர்த்துகின்றதும், வெளிப்பட உரைக்கச் செய்கின்றதும் ஆக இருக்கின்றான்.
ஆகையால், கடவுளையும் அவரது அருட்பெருமையையும் நம்புகின்றீர்களளையின், அவரால் அவரே என்னுள் இருந்து இசைக்கின்ற இதனையும் நம்பக்கடவீர்கள். ஆன்ம உரிமை காரணமாக நாம் ஒவ்வொருவரும் பிணிக்கப்பட்டுள்úளளைம். எல்லோரும் நம்மவர்களளைக இருக்கின்றார்கள். ஆகையால், நம்புமினோ நமரங்காள் என உரிமையோடு விண்ணப்பித்துக் கொள்ளப்படுகிறது.
நம்மவர் என்ற சொல்லே, நமர் எனக் குறுகியது பின்னர், நமரங்காள் என விளிக்கப்பட்டதாம். நம்மவர்கúள என்பது தான் இதன் பொருள்.
இது ஒரு நல்ல சந்தர்ப்பம். எதற்கெனில்? நம் பெருமான் வரப் போகின்றார். நடனம் புரிந்து கொண்டிருக்கும் நம் பெருமான் வரப்போகின்றார். நவமணிகட்கும் மேலாம் அருட்ஜோதி மணிகள் பதித்து ஒளிருகின்ற மன்றினிடத்தே ஆனந்த நடனம் புரிந்து கொண்டிருக்கும், நம் பெருமான் வரப் போகின்றார்.
இப்படி எல்லாமான பெருமான் வரப் போகின்றதாக யார், எப்பொழுது சொன்னது என்றா கேட்கின்றீர்கள்?
ஆம், வான் உரைத்தது தான். இது, புறத்தே வானொலி அல்லது ஆகாசவாணியிற் கேட்டதன்று. மனம் சுத்த நிலையுற்று, ஆன்மாகாசத்தின் கண்ணின்ற, நிற்கின்ற போது சத்திய வாக்கு என்னும், வானுரை மெய் மொழியாகக் கேட்கப்படுகின்றதாகும்.
ஆகையால், அவர் வரப்போகின்றது உண்மையேயாம் அவர் வரும் போது, நாமும் எதிர் கொண்டு, சுத்த தயா நெகிழ்ச்சியோடு இருந்தால் வரங்கள் எல்லாப் பெறப் போவதும் உண்மையேயாம். வரவேற்று வரம்பெறற்கு உரிய தருணம் இதுவே என குறிக்கப்பட்டுள்ளது.
நாம் நம் பதிபால் பெற வேண்டிய வரம் என்னவென நினைக்கின்றீர்கள்?
அபக்குவ வசத்தால், அவர் காரணத்தால், அது வேண்டும் இது வேண்டும் என்று, எதையாவது ஒன்றை கிடக்க ஒன்றைக் கேட்டுவிடாதீர்கள். அந்த எதனாலும் நாம் பெற வேண்டிய பெரு நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியாது.
ஆகையால், “நாம் பெற வேண்டியது அருட் பூரணப் பரம்பொருளளைகிய அவரே என உணர்ந்து கொண்டு அவரையே வரமாக, நமது வரன் (கணவன், பதி) ஆக வேண்டிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.”
இந்த வரனைப் பெற்றுக் கொண்டால், மற்றெல்லாம் பெற்றவர்களளைவோம். இந்தச் சமயத்தில் இந்த வரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு என்றே உங்களை அழைக்கின்றேன். இதனைப் புற அழைப்பிதழாகப் பார்த்துவிட்டு வைத்துவிடாதீர்கள்.
புறத்தே இவ்வழைப்பை விடுத்துக் கொண்டே உள்ளத்திலே அருளின்பத் தேனின் இன்சுவையை அனுபவித்துக் கொண்டு உங்களை எல்லாம் வரவேற்க உவகையோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றேன். அகத்தே விழிந்து எழுந்து, தூக்கமும், ஏக்கமும் அற்ற சுகப்பெரு நிலையிலிருந்து கொண்டு, உங்களை வரவேற்கின்றேன்.
ஆகையால், நீங்களும் இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு, உள் எழுந்து என்னோடு சேர்ந்து கொள்ளுங்கள். சித்திகளில் பெரிய சித்தியாம் மரணமிலாப் பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெறலாம்.
எதற்காக இவ்வளவும் வெளிப்படையாக உரைத்து உரைத்து, உறுதி கூறிக் கொண்டே இருக்கின்றாய் என்று கேட்கின்றீர்களளை?
நல்லது, நான்வேறு என் செய்வேன், என் பதி தயா பெருஞ்ஜோதி ஆகிய தியாகேசன், என்னொடு இரண்டறக் கலந்து கொண்டு பேரின்பப் பெரு நடனம் புரிகின்றார். அவர் பால் என்றும் நான் பெறுகின்ற இன்பம் நீங்களும் பெற்றுப் பெரு மகிழ்வுற வேண்டும் என்ற குற்றமற்ற பேராசை ஒன்றே காரணமாகக் கொண்டுதான் இவ்வளவையும் எடுத்தெடுத்து இயம்பி, உங்களை எல்லாம் இவ்வாறு அழைத்துக் கொண்டிருக்கின்றேன்.
இந்த என் செயலும், என் பதிச் செயலே எனத் தெளிந்து கொண்டு, ஈது அவருடைய அருளளைணையாக ஏற்றிக் கொண்டு உடனே புறப்பட்டு அகம் சேர வாருங்கள். யான் அடையும் சுகத்தினை நீங்களும் அடைய வேண்டும் என்ற ஆவல் பற்றி இதனை எடுத்துக் கூறுகின்றேன், மீண்டும்.
என்றேனும், அந்த சுகப்பெருநிலை அடையத்தான் போகின்றீர்கள். எனினும், இத்தருணம் வசமாக, வாய்ப்பாக ஏற்பட்டுள்ளது. இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அறிவுடையார் கடமையாகும். அது குறித்தே இப்பொழுது உங்களை அவசரப்படுத்துகின்றேன்.
காலத்தை வீணிற் கழித்து விட்டு, நல்ல சந்தர்ப்பத்தைக் கைவிட்டு இன்னும் நெடுங்காலம் வரை ஏன் நீங்கள் இவ்வுலகிலே துன்பப்பட்டுக் கொண்டு கிடக்க வேண்டும்! வேண்டாம் அத்துன்ப நிலை, ஆகையால் நல்லின்பநிலை பெற இப்பொழுதே வாருங்கள்.
20. பாடல்
குறித்துரைக்கின் றேன்இதனைக்
கேண்மினிங்கே வம்மின்
கோணுமனக் குரங்காலே
நாணுகின்ற உலகீர்
வெறித்தஉம்மால் ஒருபயனும்
வேண்டுகிலே னெனது
மெய்யுரையைப் பொய்யுரையாய்
வேறுநினை யாதீர்
பொறித்தமதம் சமயமெலாம்
பொய்யேபொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவமொன்றே
பொருùளனக்கண் டறிமின்
செறித்திடுசிற் சபைநடத்தைத்
தெரிந்துதுதித் திடுமின்
சித்தியெல்லாம் இத்தினமே
சத்தியஞ்சேர்ந் திடுமே.
திட்டமாகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றேன். பலப் பலவான வீண் கதைகளையும், வெற்று உரைகளையும் விளையாட்டு வேடிக்கை வீண் பேச்சுகளையும் விட்டு, குறிப்பாக அவசியமான, நற்பயனைத் தர வல்லதையே இங்கே எடுத்துக் கூறுகின்றேன்.
இதனைக் கேளுங்கள், வேறு விஷயங்களில் மனத்தைச் செலுத்தாது, பலவற்றில் சிந்தனையைச் சிதற விடாது ஒருமையோடு மிகக் கவனமாகக் கேளுங்கள். காதினால் கேட்டு உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள், கேட்டு, உள் இருத்திக் கொண்டதை, அவ்விடத்தே புதையுண்டு மறைந்து போகாமல் விளைவு கொள்ள அடிக்கடி சிந்தித்துத் தழைத்தோங்கச் செய்யுங்கள்.
அதன் பயன் வெளிப்பட செயலில் கொண்டு வாருங்கள்”.
இவ்வளவும், “கேண்மின் இங்கே வம்மின்” என்றதில் அடங்கி நின்று விளங்குவதேயாம்.
ஐயா, உலகீரே, நான் உங்களிடத்தில் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை, எனக்காக பொருúளளை, பிற உதவிகúளளை, பயனோ ஒன்றும் நீங்கள் எனக்குத் தர வேண்டியதில்லை.
நீங்கள் வெறித்த நிலையில் இருக்கின்றீர்கள். அதாவது, உண்மையறியாது, மயக்க நிலையில் இருக்கின்றீர்கள். கூனிக்கொண்டே குறும்புகள் பல செய்தலை கின்ற குரங்கு போன்ற மனத்தால், நீங்கள் எல்லாம் நாணித் தவறு செய்து கொண்டு அலைகின்றீர்கள்.
உங்கள் நன்மைக்காகவே என்னவெல்லாமோ சொல்கின்றேன் நான். ஆனால், எனது சொற்கள் எல்லாம் உண்மையானவை. ஆகையால், என் உரைகளைப் பொய் எனக் கருதிவிடாதீர்கள்; வேறு விதமாக அனர்த்தம் செய்து கொள்ளளைதீர்கள்.
அருள் ஏகதேசத்தைக் கொண்டு கண்ட மதக் கொள்கைகளை எல்லாம், கையும் மெய்யும் வருந்த பாடுபட்டு தீட்டி வைத்திருக்கின்றார்கள், ஆன்றோர்கள் ஆனால் அவைகள் யாவும் அருள் உண்மைஒளி கொண்டு சுயம் பிரகாசமாய்த் திகழ்கின்றவை அல்லவே. ஆகையால் அவைகள் பெரும் பயன் அளிக்காப்பொய், பொய், வெற்றுப் பொய்கúளயாம்.
இதனால் அவற்றில் பற்று வைத்து ஏதோ பயனுறலாம் எனக்கருதி விடாதீர்கள் பற்றத் தகுந்த மெய்ப்பொருள் ‘சிவம்’ ஒன்றே எனக்கண்டு கொள்ளுங்கள், எனது சிவம் (ஜோதி) சுத்த சிவம்; சமய மதங்களில் குறிக்கப்படுகின்ற சிவமன்று.
இயற்கை உண்மையே வடிவாகியும், இயற்கை விளக்கமே உயிராகியும், இயற்கை இன்பமே பயனாகியும் என்றும் இலங்கிக் கொண்டிருப்பதே எனது சிவமாம்.”
இந்த ஒன்றான சிவத்தைக் கண்டு அறிந்து ஏற்றுக் கொள்ளுங்கள். அறிவால் அறிந்த அதனை ஏற்பது எங்ஙனமெனில், துதித்துப் பணிந்து ‘நாம்’ போய் அதுவாதயேயாம்.
நம்முடன் கலந்து பொருந்தி விளங்கும் பதியைச் சிற்றம்பலத்திலேதான், அருளளைல் கண்டு கொள்ளக் கூடியதாய் இருக்கின்றது. ஆதலால் அவ்விடத்தில் சென்றடைந்து துதிபாடி அருளடைதல் வேண்டும். அந்த அருள் கிடைக்கப்பெறுகின்ற நாள் என்றோ அன்றே சித்திகளும் அடையலாம்.
இது சமயம், இத்தினம் தான் அவ்வருளைப் பெறவும் அதனால் சித்திகளை அடையவும் தக்க தினமாய்ச் சார்ந்துள்ளது. என்றோ எப்பொழுதோ ஒரு நாள், நாம் ஆண்டவர் அருளைப் பெறப்போகின்றோம் என்றும், அந்த அருளைக் கொண்டு பல்வேறு சித்திகளையும் எய்தி ஆனந்திக்கப் போகின்றோம், என்றும் நினைத்துக் கொண்டு, மந்தமாக இருந்து கொண்டு இந்நாளைக் கை நழுவ விட்டு விடாதீர்கள்.
உண்மையாக சத்தியமாக அருட்பெருஞ்சித்திகளைப் பெறற்குரிய தினம் இதுவாக அறிந்து அடையுங்கள்.
பொறித்த மதம் சமயமெல்லாம் பொய் பொய்யே” என்று கூறியுள்ளது கண்டு உண்மை அறியாதவர்கள் மருளுகின்றார்கள். பழமை விரும்பிகள் பதறுகிறார்கள், மதத் தலைவர்கள் வெறுத்து வெகுண்டு நோக்குகின்றார்கள்.
அப்படியெல்லாம் இருத்தல் கூடாது. உண்மை அருளளைணையை அறிந்து, நேரடியாக மேனிலைக்கு வர வேண்டும், யாவரும் அப்படி இருளறையை விட்டு விட்டு, அருùளளைளி வெளிக்கு வந்தால் தான் உண்மை எல்லாம் உள்ளவாறு விளங்கும்.
சமயம் எல்லாம் பொய் பொய்யே” என்பதும் கண்டு கொள்ளலாகும். அருட்பெறி நெறியே சற்சமயமாக விளங்கும். அதுவே உலகிற்கு இத்தருணம் வேண்டிய ஒன்றாகவும் அறிந்து கொள்ளப்படும். எல்லோரும் ஒருமித்து வாழற்கான, அருட்பெருஞ்சமயம் “சுத்த சன்மார்க்கமே” எனவும் கண்டு கொள்ளலாம்.
திருவருúள இதனைக் கொண்டு வந்திருக்கின்றது. பிறரால், எவ்விதத்தும் தடை செய்யவோ மறுக்கவோ முடியாது. அப்படிச் செய்ய முயலுபவர்கள் திருவருட் செயலின் முன் படுதோல்வி அடைந்து ஒழிவார்கள்.
21. பாடல்
சேர்ந்திடவே ஒருப்படுமின்
சமரசசன் மார்க்கத்
திருநெறியே பெருநெறியாம்
சித்தியெலாம் பெறலாம்
ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும்
உறங்குதற்கும் உணர்ந்தீர்
உலகமெலாங் கண்டிடுமோர்
உளவைஅறிந் திலிரே
வார்ந்தகடல் உலகறிய
மரணமுண்டே அந்தோ
மரணமென்றால் சடமெனும்ஓர்
திரணமும்சம் மதியா
சார்ந்திடுமம் மரணத்தைத்
தடுத்திடலாம் கண்டீர்
தனித்திடுசிற் சபைநடத்தைத்
தரிசனம்செய் வீரே.
சமரச சன்மார்க்கம் என்னும் திருநெறி ஒன்றே, திருவருளளைல் வழங்கப்படுகின்ற அருட்பெரு நெறியாகும்.
மற்ற மத நெறிகளும் கூட திருவருளளைல் வழங்கப்பட்டவை தாமே என்று நினைத்திருக்கக் கூடும். ஆனால், உண்மையில் பெருமாறுபாடு இருக்கக் காண்போம்.
இந்தச் சமயம் வெளிப்பட்டுள்ள அருட் பெருநெறி பூரணத் திருவருளளைல், அருட்பெருஞ் ஜோதியினின்று நேரடியாகக் காரியப்படுவதை உணர்கின்றோம். இந்நெறியால், அகத்தே அருட் பெரும்பதியோடு ஒன்றி இருந்து கொண்டு அனக அருட் பெரும்வாழ்வு வாழக் கூடியதாய் உள்ளதாம்.
மற்ற நெறிகள் மனோ கரணத்திலிருந்து புறப்பட்டுப் புறத்தே விஷயாதிகளில் செலுத்துவதாயும், அகத்தே ஆன்மாவில் ஒடுங்குவதாயும் உள்ளனவாம். இவற்றில் நிலையான இன்ப வாழ்வு விளங்குவதில்லையாம். உண்மையான பதி வாழ்வில் அனுபவ பூர்வமாகத் திகழ முடிகின்றதில்லை.
எனினும் எது ஒன்றும் அருள் ஏகதேசமின்றி விளங்குவதில்லை, தோற்றுவதில்லை. ஆதலின், இப்புற நெறிகள் கூட பொய் மாயா நெறிகள் ஆயினும் அவ்வேகதேச அருளளைல் தான் தோற்றுவிக்கப்பட்டனவாம்.
அந்நெறிகள், மறக்கருணை காரணமாய் மக்களை பல வழிகளில் செலுத்தியொறுத்தித் திருத்திப் பக்குவப்படுத்துவனவாம். இவற்றின் முடிவில், பக்குவம் உண்டாகும் போது இவையெல்லாம் மங்கியொழிய, அருட்பெரு நெறி திறக்கப்படுவதாம். எனவே, பழநெறிகள் பக்குவப்படுத்த வந்த அனித்திய, மாயா அல்லது பொய் நெறிகúள என்றும், அவை தம் காரியத்தை முடித்து விட்டு இது சமயம் மறைய வேண்டியனவே என்றும் அறிகின்றோம்.
ஆகையால், பொய்ந்நெறி போகவும், மெய்நெறி வரவும் திருவருúள ஆணை செய்கின்றது. இந்நாள்.
ஆன்மாவாகிய வித்து விளைந்து பயன் தரப் பழைய சமய மதங்கள் எல்லாம் எருவாக்கிப் போடப்படுகின்றன. இதன் மேல் “அருட்ஜோதியின் அமுத கிரணங்களளைல்”, இதுகாறும் மண்டிக் கிடந்த ஆன்ம வித்திலிருந்து, அருள் மூளை கிளம்பிச் செடியாகி, மரமாகி, பூத்துக் காய்த்து அருட்பெருஞ் ஜோதிக் கனியாம், ஆன்ந்த வாழ்வு வழங்கப் போகின்றதாகும். ஆகையால், இந்த அருட்பெரு நெறியைத் தேர்ந்து, தெளிந்து கொள்ளுங்கள்.
ஓர்ந்திடுமின் - ஓர்மையினால், நுணுகி ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். இதுவரை, உண்டு களித்திருப்பதிலும், உறங்கிக் காலம் கழித்திருப்பதிலும் வீண்போய்க் கொண்டே இருந்தீர்கள்.
பிரபஞ்ச இரகசியத்தை எல்லாம் கண்டிடும் ஓர் உளவை, ஓர் உபாயத்தை அறிந்து கொள்ளவில்லையே, நீங்கள். கடல் சூழ்ந்த இவ்வுலகில் முடிவான பயன் எது என்று கருதுகின்றீர்கள்?
அது மரணம் ஒன்றே என்றுதான் அறிந்திருக்கின்றீர்கள், ஐயோ, அந்த மரணத்தை யார் தான் விரும்புவார்கள்! ஒருக்கால், அறியாமை, துன்பம் காரணமாக ஒரு சிலர் மரணத்தை வருந்தி அழைத்து மேற்கொள்ளலாம்.
அறிவும், இன்பமும் விளங்கும்போதும், அந்நிலையில் இரக்க விரும்புவார்கள்! ஒருக்கால், அறியாமை, துன்பம் காரணமாக ஒரு சிலர் மரணத்தை வருந்தி அழைத்து மேற்கொள்ளலாம்.
அறிவும், இன்பமும் விளங்கும்போதும், அந்நிலையில் இருக்க விரும்புவார்கúள அல்லாது, இறந்து ஒழிய மனங்கொள்ளளைர். மரணமே தவிர்க்க முடியாத முடிவு எனக் கருதி மன நிம்மதியுடன், அம்மரண வாயிலில் நுழைகின்றவர்களும், எல்லாம் இழந்து போக நேருகின்றதே, இனி என்னவெல்லாம் வந்து சூழுமோ என்று வேதனைப்பட்டுக் கொண்டே செல்லுகின்றார்கள்.
உண்மையில் ஆன்மாவுக்கு பிறப்பு இறப்பு இல்லை. அப்படிப்பட்ட ஆன்மா, இந்த தேகத்தில் வந்து தோன்றி, இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தன் இயல் உண்மையாகிய நித்திய இருப்பையும் உணர்ந்திருக்கின்றது. இந்த நித்தியானுபவம் விளங்க இத்தேகமும் உடனிருக்க வேண்டும் எனவும் அறிந்து கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், எந்த ஆன்மாவும் தான் பெற்றுள்ள தேகத்தை இழக்கச் சிறிதும் சம்மதிக்காது என அறிய வேண்டும். சம்மதித்தோ, சம்மதியாமலோ இறப்பது அறியாமையே.”
சார்ந்திடும் அம்மரணத்தைத் தடுத்திடலாம், கண்டீர்” என்கின்றார். ஆன்மாவுக்கு தேக நீக்கம் உண்டாவதே மரணம். அந்த மரணத்தால், உடலில் நிரம்பி இருந்த உயிர்ச் சக்தி ஆன்மாவில் ஒடுங்கிவிடுகின்றது. ஒடுங்கின உயிர் அடுத்த பிறப்புருவம் ஏற்கின்ற சமயம் துடித்தெழுந்து சூழ்ந்து வளர்கின்றது.
உயிர் உடம்பொடு இருக்கும் ஆன்மாவில், உள்ளிருந்து அருட் சக்தி வெளிப்பட்டு, தேகத்தில் நிறைகின்ற போது, அத்தேகமே அருட் ஜோதி வண்ணமாக மாறகின்றதாம்.”
இப்படி மாறிவிட்டால் தான் பின்னர் அத் தேகம் ஆன்மாவை நீங்குவதில்லை. அது ஆன்மாவின் பிற்பகுதியாகவே ஆகி நிலவுகின்றதாம். இது மரணமில்லாப் பெரு வாழ்வாம்.
இவ்வாழ்வு பெறத் தனித்திலங்கும் சிற்சபையும், அதிலிருந்து அருட்பெரு நடனம் புரிகின்ற ஆண்டவரையும் காண வாரீர். கண்டு அருளளைலே கலந்து கொண்டால் மரணமில்லாப் பேரின்ப வாழ்வு ஏற்பட்டுவிடும்.
ஆகையால் இங்கு வந்து சேர்ந்திட ஒருப்படுங்கள். சம்மதப்படுங்கள். திருவருளும் பாலிக்கப்படும்.
22. பாடல்
செய்தாலும் தீமையெல்லாம்
பொறுத்தருள்வான் பொதுவில்
திருநடஞ்செய் பெருங்கருணைத்
திறத்தானங் கவனை
மெய்தாவ நினைத்திடுக
சமரசசன் மார்க்கம்
மேவுகவென் றுரைக்கின்றேன்
மேதினியீர் எனைத்தான்
வைதாலும் வைதிடுமின்
வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
மனங்கோணேன் மானமெலாம்
போனவழி விடுத்தேன்
பொய்தானோர் சிறிதெனினும்
புகலேன்சத் தியமே
புகல்கின்றேன் நீவிரெலாம்
புனிதமுறும் பொருட்டே.
மேதினியீர் எனது உரையைக் கேட்டு சுத்த சன்மார்க்கத்திற்கு வந்து சேருங்கள்” என்கின்றார். உலகத்தவரை ‘மேதினியீர்’ என்றதன் காரணப் பொருத்தம் நோக்குவோம்.
மேதம் என்றால் அறிவுடையவர்கள் என்றதாகக் கொள்ளலாம். கொழுப்புடைய கொழுத்தவர்களளைகவும் கொள்ளலாம். அன்றியும், மேதி என்றால் எருமை எனப் பொருள்படலால், அவ்வெருமைத் தன்மைகளளைகிய மந்தம், தடிப்பு, மூர்க்கம் சோம்பல் முதலிய குணங்கொண்டு, ஜெக மாயைச் சேற்றில் கிடக்கும் அபக்கவிகúள என அழைத்து பக்குவப்படுத்தற்கே எனவும், கொள்ளலாம்.
எனது பதி இருக்கின்றாரே, அவர், என்ன தீமை செய்திட்ட போதிலும் பொறுத்துக் கொள்வார். அது அவரது பெருங்கருணைத் திறனாகும். அக்கருணையோடு தான் அருட் பொதுவில் திருநடனம் புரிந்து கொண்டே இருக்கின்றார்.
நீங்கள் அவரை மெய்தாவ நினைத்திடல் வேண்டும். அதாவது, சாத்தியமாக நினைத்திடல் வேண்டும். மெய்யாகிய புறத்தேக நிலை கடந்து, தேகப் பற்றொழிந்து, பொதுவிடத்தே நினைவு கூற வேண்டும். அவ்விடத்தே சமரச சன்மார்க்கம் அடைவீர்கள்.
சரீரப் பற்றை விட்டு அம்பலத்திற்கு வாருங்கள் என்று உங்களை அழைக்கின்றதால், நீங்கள் என் மீது வெறுப்பு கொண்டு, வைவதாயினும் சரி, நான் லட்சியம் பண்ணமாட்டேன். கவலைப்படவும் மாட்டேன். உங்கள் வசைகளைக் கூட வாழ்த்துக்களளைகவே கொண்டிடுவேன். கொஞ்சமும் மனம் வாட்டமடையமாட்டேன். வசைக்கு ஆளளைனால் மானம் போய் விடுமே என்ற அச்சம் கொள்ளவில்லை, நான்.
மானம் என்பது புற தேகப் பற்றினால் உண்டான தன் மதிப்பு, தேகப்பற்று ஒழிந்து, ஆன்ம நிலையிலிருந்து கொண்டு தயா உரை பகரும் எனக்குத் தயவு ஒன்றே அபிமானமாய் உள்ளது. உலகர் கூறும் அவமானம் ஏதும் எனக்கு ஒரு பொருட்டாக இல்லை.
ஆகையால், மானம் எப்படி எங்கு வேண்டுமானாலும் போகட்டுமே. நான் அருட்ஜோதி மய விமானத்தில் ஏறி, எந்த மானமும் சாரமுடியாத மேனிலைக் கண்ணுற்று வாழ்கின்றேன்.
அங்கு தேவர்களும், மூவர்களும், சித்தர்களும், மூத்தர்களும் என்னையே போற்றிக் கொள்கின்றார்கள். இங்கு வந்து பாருங்கள். என் மொழியில் சிறிதளவு பொய்யும் கிடையாது. சத்திய ஜோதியே நிறைந்திலங்கக் காண்பீர்கள்.
எதற்காக உண்மையே உரைக்கின்றேன் எனில், நீங்கள் எல்லோரும் புனிதம் உறும் பொருட்டேயாம். நீங்கள் எல்லோரும் அறியாமையினால் தாழ்ந்த கீழ் நிலையில் இருந்து கொண்டு பலவிதமான கஷ்ட நஷ்டத்திற்கு ஆளளைகித் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
அச்சோ, உங்களுக்கு உண்மை ஒன்றும் தெரியவில்லை, தெரிந்து கொள்ளளைமல் தானே இப்படித் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்று எண்ணி, எண்ணி, உங்களுக்காக ஏங்குகின்றேன். இறைவனிடத்திலும் வேண்டிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் யாவரும் புனிதமுற வேண்டும்; நன்மை பெற வேண்டும்; நல்லின்ப வாழ்வு அடைய வேண்டும், என்பனவே என்னுடைய கோரிக்கைகளளைம்.
மானம் இழந்து உயிர் வாழல் கூடாது என்பது பழமொழி.
“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்”
என்று திருக்குறளும் மேற்கோள் காட்டப்பெறும். இது உலகியற் புறநிலைக்கே ஒவ்வும். உடற் பற்றறாத உலகிகட்டு, உயிரின் (ஆன்மாவின்) கடவுட் சார்பு காணாத மானிடர்க்கு, உயிரைவிட இந்த மானம் பெரிதாகப் படுகின்றது.
உயிர் விளங்கும் இவ்வுடல் வாழ்வில், அருள் அனுபவம் பெற வேண்டியது தான் முக்கியமாக உள்ளது. மற்ற மாயா அனுபவங்களில் மயங்கிடுதல் சரியன்றாம்.
ஊன உடம்பின் மாயா அனுபவமே, மானம்” ஆக உள்ளதால், இந்த மானத்தை மதித்துக் கொள்ளல் ஏனோ?
அருள் வாழ்வு வாழ்கின்றவர்கள் சுத்த தயவு அடிப்படையில் எதையும் புரிவார்கள். அவற்றில் ஓர் ஒரு காரியம் உலகரின் பழிப்புக்கு உரியதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் அப்படி இருக்காது, கடவுட் சம்மதமாகவே இருக்கும்.
மானம் பெரிதென மதித்து மாய்வதால், உயிரே போய்விடும் போது, மானம் என்ன ஆகின்றதோ! உயிரைக் காப்பாற்றி வைத்திருந்தால், கடவுள் அருள் ஒளியை அதில் விளங்கச் செய்யப்பெறலாம்.
மானம் இழந்தவர்களையும், அதனினும் பெரிய குற்றம் புரிந்தவர்களையும் கூட நம் பெருங்கருணை வள்ளல், பொறுத்து மன்னித்து திருவருள் பாலிக்கவென்றே அம்பலத்தே திருநடனம் புரிந்து கொண்டு வரவேற்கின்றார்.
ஆதலினால் தான் நமது அண்ணலார் “மானமெலாம் போன வழி விடுத்தேன், எனைத்தான் வைதாலும் வைதிடுமின்”, மனத்திருப்தியோடு எல்லாம் நல்வாழ்த்தாகக் கொள்ளுகின்றேன் என்கின்றார்.
இதனால், ஒருவன் மானத்தை விட்டு ஒழுகுதல் வேண்டுமென்பதல்ல, திருவுள்ளம். சுத்த சன்மார்க்கத்தில் ஒழுகினால், மானம் அழிய வேண்டிய சூழ்நிலையும் உண்டாகாது. உயிருக்கும் அழிவு உண்டாகாது.
23. பாடல்
பொருட்டலநும் போகமெலாம்
பொய்யாமிங் கிதுநான்
புகலுவதென் நாடொறுநும்
புந்தியிற்கண் டதுவே
மருட்டுலகீர் இருட்டுலகில்
மடிவதழ கலவே
மரணமிலாப் பெருவாழ்வில்
வாழவம்மின் இங்கே
பொருட்டிறம்சேர் சுத்தசிவ
சன்மார்க்க நிலையில்
பொருந்துமின்சிற் சபையமுதம்
அருந்துமின்அன் புடனே
அருட்டிறம்சேர்ந் தெண்ணியவா(று)
ஆடுமினோ நும்மை
அடுப்பவரே அன்றிநின்று
தடுப்பவர்மற் றிலையே.
இந்தப் பெரிய உலகில், இயற்கைப் பொருள்களும், சக்திகளும் எத்தனை வழங்கப்பட்டுள்ளீர்கள். அவற்றோடு செயற்கை முறையால், இயந்திர தந்திர சகாயங்கúளளைடு எவ்வளவு போகப் பொருட்களை ஆக்கிக் கொண்டுள்ளீர்கள்.
இவைகளளைலெல்லாம் துய்க்கப்படுகின்ற சுகபோக வாழ்வு பொய்த்துப் போவது தானே!
இந்த உண்மை நான் சொல்லித்தானா நீங்கள் தெரிந்துகொள்ளுவது! நீங்கúள உங்களுடைய தெளிந்த மனத்தில் கண்டு கொண்டு இருக்கின்றீர்கள். கண்டு கொண்ட பின்னரும் ஏனோ நீங்கள் புலபோகத்தில் இச்சையறாது உழல்கின்றீர்கúளளை தெரியவில்லை!
அறிவுத் தெளிவில்லாத மருள் நிலையில் வாழ்ந்து விட்டு முடிவில் அறிவு விளக்கமும், உயிர் விளக்கமும் முற்றும் மறைந்துபட்டு, இருள் உறுகின்ற மரண நிலை அடைவது அழகல்லவே. இதனால் “மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ்வதுவே அழகு” என்பது குறிப்பு.
அந்த நித்திய வாழ்வு வாழ்வதற்கு நீங்கள் இங்கே வந்து சேருங்கள். அந்த இடத்தில் சுத்தசிவ சன்மார்க்கம் வெளிப்பட்டு விளங்குகின்றது. அந்த மார்க்கம், பொருள் திறம் சேர்ந்த ஒன்றாகும். அதாவது, மெய்ப்பொருளின் உண்மை சக்தி விளக்கம் பெற்றுள்ளதாகும்.
அருட்ஜோதி நெறியே சுத்த சிவ சன்மார்க்கமாய் உள்ளதாம். இம்மார்க்கத்தினால் இவ்விடம் வந்து இந்தச் சிற்சபையை சார்ந்துவிடுங்கள். இந்த சிற்சபையை சார்ந்து விடுங்கள். இந்த சிற்சபையில் அன்பர்கட்கே மிகத் தித்திக்கும் அமுதம் நிரம்பியுள்ளது நீங்களும் இங்குற்று அன்பாய் உருகுவீர்களளையின், அச்சிற்சபை அமுதம் அருந்தியவர்களளைவீர்கள்.
அவ்வமுது உண்டு அம்பல வாழ்வு வாழ வாழ, அன்பு முதிர்ந்து அருட்பெருஞ் சக்தியாகத் தழைக்கும் அவ்வருட் பெருஞ்சக்தியால் தான், திருவுளச் சம்மதம் போல் நீங்களும் இவ்வுலகில் ஆடிடலாம்.
அப்படி ஆடுகின்ற போது எவரும் குறுக்கிட்டு தடை செய்யவே மாட்டார்கள். எல்லோரும் வந்து வந்து சேர்ந்து கொள்வார்கள். சூழ வருகின்றவர்கள், அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ கூட உதவுகின்றவர்கúள ஆவார்கள்.
அருட்டிறஞ் சேர்ந்து எண்ணியவாறு ஆடுதல்” - “உலக அரங்கில் வாழ்க்கை நாடகம் ஆட வந்துள்ளவர்கúள ஒவ்வொருவருமாவர். ஆகையால், அருள் உண்மை அறிந்து, அகம் அடைந்து, அவ்வருட் சக்தியே அனகமுற்று விளங்க, இவ்வுலகில் வாழ்க்கை நடத்துதல் வேண்டும். இந்த வாழ்வு தானே ஆடுதலாகப் புனைந்து கூறப்பட்டதாம்.”
அன்றியும் ஆடுதல், நடனம் ஆடுதலைக் குறிப்பதாம். நம் அருட்பெருஞ்ஜோதி நடனபதி, இயற்கை உண்மை வடிவோடு இயற்கை விளக்கம் செய்து கொண்டு, இயற்கைத் இன்பத்தை வழங்குகின்றதே, ஆண்டவர் நடனமாகக் குறிக்கப்படுகின்றதாம்.
அந்த அருட்பதி நடனச் செய்கையால் உயிர்கள் எல்லாம் வாழ்கின்றன” இவ்வுண்மையை ஓர்ந்து, அந்த பதி அருளைச் சார்ந்து கொள்ளும் போது, அப்படிக் கலந்து கொண்டவனும், சூழுலகில் அருளின்பம் தழைப்பிக்க தயவுத் திருப்பணியே புரிகின்றவனாவான். அப்பணிச் செயலே அவனது ஆட்டமாகக் குறிக்கப்படும்.
அவ்வாட்டத்திற்கு, திருவருúள அகத்தும் புறத்தும் இருந்து உதவுகின்றதாம். புறத்தே ஆடி வருகின்றவர்களின் உள்ளத்திருந்தும் உதவுகின்றவர் நம் பதியே. ஆதலின், அவ் ஆட்டத்திற்குத் தடைஏதும் உண்டாகாது எனத் தெளிந்து கொள்ளலாம். அருட்டிறம் சேர்ந்தாடுவதால் அமுதானந்த மயமாய் விளங்கலாம்.
24. பாடல்
மற்றறிவோ மெனச்சிறிது
தாழ்ந்திருப்பீ ரானால்
மரணமெனும் பெரும்பாவி
வந்திடுமே அந்தோ
சற்றுமதை றும்மாலே
தடுக்கமுடி யாதே
சமரசசன் மார்க்கசங்கத்
தவர்களல்லா(து) அதனை
எற்றிநின்று தடுக்கவல்லார்
எவ்வுலகில் எவரும்
இல்லைகண்டீர் சத்தியம்ஈ(து)
என்மொழிகொண் டுலகீர்
பற்றியபற் றனைத்தினையும்
பற்றறவிட் டருளம்
பலப்பற்றே பற்றுமினோ
என்றுமிற வீரே.
இப்பொழுது கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பம் அருளடைந்து உய்வு பெறற்கு, உரிய ஒன்றாகும். இதனை அசட்டையாக விட்டுவிடக்கூடாது. பார்க்கலாம், சற்று பொறுப்போம், என்ன அவசரம் என்று காலத்தை வீண் போக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
எல்லாம் தெரிந்து கொண்டுதான் இருக்கின்றோம். நேரமும் காலமும், சூழ்நிலையும், சற்று பொருந்தி வரும் போது இந்த சன்மார்க்க விஷயத்தைப் பார்த்துக் கொண்டால் போகிறது, என்றெல்லாம் தாமதித்துக் கொண்டிருத்தல் கூடாது.
அப்படிக் கொஞ்சம் காலவிரயஞ் செய்து கொண்டே இருப்பீர்களளைனால், முன் அறிவிப்பு ஏதுமில்லாமல் எந்த ஒரு நொடியிலும், மரணம் என்னும் பெரும்பாவி வந்து விடும்! அப்படி எதிர்பார்த்திராத ஒரு சந்தர்ப்பத்திலே அம்மரணம் நெருங்கிவிட்டால், அப்பொழுது உங்களளைல் ஒன்றும் செய்யமுடியாது.
பயமும், கலக்கமும், அசக்தமும் வந்து முடக்கி ஒடுக்கி விடும். அதனை உங்களளைல் சிறிதும் தடுத்து நிறுத்த இயலாது. அப்படி தடுத்து நிறுத்தும் அருள் ஆற்றல் படைத்தவர்கள் எவரேனும் உண்டெனில், சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்த சுத்த சன்மார்க்கிகúள ஆவார்கள், அவர்கள்.
சுத்த சன்மார்க்கி ஒருவனே, அனக அருள் அடைவால், அகவுண்மை இயல்பைப் புறவடிவில் ஏற்றிக் கொண்டு, அருள் திருமேனியோடு திகழ்வான். ஆதலின் அவன் ஒருவனே மரணத்தை ஏற்றி நின்று தடுத்து ஒழித்துவிடுகின்றான்.
இந்தச் சன்மார்க்கியே அல்லாது, இங்ஙனம் இறப்பை ஒழித்து இயலின்ப உருவொடு விளங்கவல்லவர்கள் எவரும், எவ்வுலகத்தும் இல்லை என்று அறிமின்கள்.
அது, எப்படி, எவரும் எந்த உலகத்தும் மரணத்தை வென்று வாழ்பவர்கள் இல்லை என்று அவ்வளவு நிச்சயமாகக் கூறுகின்றாய், என்றா சந்தேகிக்கின்றீர்கள்?
சந்தேகப்பட வேண்டியதில்லை. எவ்வுலகத்து எவ்வுயிராயும், எக்காலத்தும் இருக்கின்றவர் நமது அருட்பெருஞ்ஜோதி பதி ஒருவரேயாவர். திருவருளளைலே இவ்வுண்மையை உணர்த்தப்பட்டுள்úளளைம், இது சமயம்.
ஆகையால், அந்த ஒருவராகிய நம் அகமுடையான் தானே, நம் ஒவ்வொருவராயும் இருக்கின்றார் என்பது உண்மையாம். அந்த அகமிருக்கும் ஒருவரே அனக அனுபவத்தில் விளங்குவது தான் சுத்த சன்மார்க்க நிலையாகும். ஆகையால், சுத்த சன்மார்க்கியும், அனக பதியும் ஒன்றேயாம்.
இந்த சன்மார்க்கிகள் உலகில் பலராக விளங்கினாலும் கடவுள் மய அனுபவத்தில் ஒன்றேயாம். எனவே, இச் சன்மார்க்கி ஒருவனே, அனக கனக வடிவொடு வாழ்பவன் ஆகின்றான். மரணத்தையே மரணமடையச் செய்தவனாகின்றான்.
இதனாலே தான், இந்த சுத்த சன்மார்க்கியைத் தவிர (அனக அருட்ஜோதிபதியைத் தவிர) வேறு எவரும், எவ்வுலகத்தும், எக்காலத்தும் இல்லை எனத் தீர்மானமாக கூறிவிட முடிகின்றதாம். இதனால் இக்கூற்று முக்காலும் முழு உண்மை, சத்தியம் என்று உறுதிதொனிக்கக் கூறப்பட்டுள்ளதாகும்.
இந்தச் சத்திய வாசகத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு, இவ்வுலகில், அருளம்பலப் பற்று ஒன்றினையே திடமாகப் பற்றிக் கொள்ள வேண்டும். அப்படித் தீவிரமாகப் பற்றிக் கொள்ள வேண்டுமானால், மற்றெல்லாப் பற்றுகளையும் அறவிட்டு விடல் வேண்டும். பிறவற்றில் வைத்துக் கொண்டுள்ள, தடையான பற்றுகளை எல்லாம் அறுத்து விட வேண்டுவது அவசியம்.
சமய மதப் பற்றுகள், கொள்கைப் பற்றுகள், தேசப் பற்று, நாட்டுப்பற்று, இனப்பற்று முதலியனவும், மூவாசைப் பற்றும் முடிவில் தேகப்பற்றும் ஒழிக்கப்பட வேண்டும்.
இறுதியில் கூறிய “தேகப்பற்றே எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் இருக்கின்றதால் அதனையே மிக முக்கியமாக முதலிலேயே களைந்திட வேண்டும்”.
இவ்வுடற் பற்று நீங்கியவிடத்து மற்றெல்லாம் பற்றுகளும் தாமே ஒடுங்கிப்போம், தேகப் பற்றில்லாது வாழ வேண்டுமேயானால், அருள் அம்பலவன் பற்றையே முழுத் துணையாகக் கொண்டாக வேண்டும்.
இந்தக் கடவுட் பற்று ஏற்பட்டுவிட்டால் மற்றவைகளிடத்து இருந்த பற்றுகள் தாமே நீங்குவதோடு, வேண்டுதல் வேண்டாமை அற்ற சமநிலையும் உண்டாகிவிடும். அப்போது அருளம்பலத்தான் அருளளைணை ஒன்றே காரணமாயிருந்து, உலகிடை வாழவைப்பதாம்.
இவ்வருளம்பலவாணர்கள், உடற்பற்றற்று உள்ளிருந்து கொண்டு, உலக காரியங்களை நடத்துகின்றார்கள். தயவுச் செயல் புரிய வேண்டும் என்ற காரணத்தால் புறப்பற்று அறுப்பதில்லை அவர்கள். அது கடவுள் அருட்செயலாகக் காரியப்படுகின்றதால், அருளம்பலத்தில் இருந்து புரிகின்றவர்கள் பந்தமுறுவதில்லை. அதற்குப் பதிலாக அருட் பேராற்றல் கொண்டு அனக வாழ்வில் ஓங்குகின்றார்கள்.
ஆகவே, இவ்வம்பலப் பற்று ஒன்றே அவசியம் மேற்கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.
25. பாடல்
இறந்தவரை எடுத்திடும்போ(து)
அரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம்நீர்
ஏனடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணிமூப்பில்
சம்மதமோ நுமக்கு
மறந்தும் இதை நினைக்கில்நல்லோர்
மனம்நடுங்கும் கண்டீர்
சிறந்திடுசன் மார்க்கமொன்றே
பிணிமூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடும்காண்
தெரிந்துவம்மின் இங்கே
பிறந்தபிறப்(பு) இதிற்றானே
நித்தியமெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம்
உற்றிடலாம் விரைந்தே.
உங்களுக்கு மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மரணமடைந்து விடுகின்றபோது, அளவு கடந்த துக்கம் ஏற்பட்டு, அடக்க முடியாது அழுகை வெளிப்பட்டு அலறுகின்றீர்கள். இவற்றால் எல்லாம், அந்த இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று எழுந்திடமாட்டார்கள் என்பது, உங்களுக்குத் தெரிந்து தான் இருக்கின்றது.
இன்னும் சற்று உண்மை அறிந்தவர்களளையின், நித்திய ஆன்மாவோடும், அநித்திய தேகத்தோடும் கூடியிருந்தவர் உடலை விட்டு கடந்து (இறந்து) விட்டார் என்றும் அப்பிரிவு நிலையே பெருநஷ்டம் என்றும் உணர்ந்து வருந்துவீர்கள்.
மற்றும் சிலரோ உண்மை அறியாது, இறந்தவர் தெய்வநிலை எய்தி விட்டார் என்று நினைத்து சமாதானம் அடைந்து தம் வருத்தத்தை மாற்றிக் கொள்கின்றார்கள்.
மற்றுஞ்சில மேதைகள், இறப்பைப் பேரிழப்பு (பெரு நஷ்டம்) எனக் கொள்ளளைது, இறந்தவருடைய தேகம் அன்றும் இருந்தது, இன்றும் இருக்கின்றது, ஆன்மாவையோ அன்றும் காணவில்லை, இன்றும் காண்கின்றீர்கள் இல்லை, அப்படி இருக்க எதற்காக அழுது அரற்றுகிறீர்கள் அந்தோ! என இரக்கப்பட்டு சமாதானம் கூறுகின்றார்கள்.
இப்படியெல்லாம், பலகாலும் கண்டும் கேட்டும் கவலைப்பட்டுப் பின்னர் மறந்தும் விடுகின்றீர்கள். இது தான் உங்கள் சுபாவமாகி விட்டிருக்கின்றது.
அருட்பெரும்பதியின் உண்மையை அறிந்து கொள்வீர்களளையின், அவர் பால் இறவா வரம் பெறலாம். இறவா வரம் பெற்று, இன்போடு வாழ வேண்டும் என்பதுவே திருவருளளைணையாகவும் இருக்கின்றது.
கடவுளுண்மையும், அவரது ஆணையையும் அறியாமல் இருந்தது போக, அறிந்து கொண்ட பின்னும் மறந்து விட்டுத் துன்பப்பட்டுக் கொண்டு கிடப்பது ஏனோ! பிணி, மூப்பு, சாக்காடு அடைகின்றது, இன்னமும் உங்களுக்கும் சம்மதம் தானோ?
இவற்றை நினைத்தாலும், இவற்றை அடைகின்றவர்களைக் கண்டாலும், இவற்றைக் கண்டு வருந்தி அழுது அரற்றுகிறவர்களை நோக்கினாலும் நல்லோர் நடுங்குகின்றார்கள்.
இந்நிலை கண்டும், இறப்பு அச்சம் கொள்ளளைதவர்களும், இறப்பை இன்முகத்தோடு ஏற்கின்றவர்களும், யாதொரு கலக்கமும் இல்லாது சாந்தத்தோடு மரணம் அடைகின்றவர்களும் உண்டெனில், அவர்கள், ஆனந்த நடனம் புரிகின்ற அருட்பெரும் பதியின் ஆணையை அறியாதவர்கúள ஆவார்கள்.
சிறந்த சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம், அனகநெறி என்னும் அருட்பெரு நெறியேயாம். இவ்வொரு நெறியே, பிணி, மூப்பு, மரணத்தை ஒழித்து, உட்சாராமல் தடுத்து விடுவதாம்.
எந்த நிலையில் இருப்பவர்களும், அதாவது பிணி, மூப்பு, அடைந்து இருக்கின்றவர்களும் கூட, இச் சன்மார்க்கத்திற்கு வந்து சேர்ந்து திருவருளைப் பெறுவார்களளையின் அப்போது முதல், அவர்களுடைய பிணி மூப்பும் மாற்றிடப் பெற்று சுகானந்த தேக வாழ்வு நல்கப்படுவார்கள்.
இகத்தில் தான தருமங்கள் செய்தால், பரத்தில் மேல் பிறப்பில் நன்மை அடையலாம் என்கிறார்கள். இப்பொழுதே நல்வழியில் சென்றுவிட்டால் வரும் பிறப்பில் நற்பயன் பெறலாம் என்கின்றார்கள். அவற்றை எல்லாம் பற்றி நினைக்க வேண்டாம்.
மேலும், “இந்தப் பிறப்பில் காலம் கடந்துவிட்டதே, வயது ஆகிவிட்டதே, பிணி, மூப்பு, வந்து விட்டனவே எப்படி இனிமேல், இப்பிறப்பில் ஈடேறப் போகிறோம்” என்றெல்லாம் கவலைப்படவேண்டாம்.
“இந்தப் பிறப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எந்த நொடியிலும், கடவுள் அருள் பூரணமாகவே உள்மறைந்து கிடக்கின்றது உண்மையேயாம். ஆகையால் உயிர் பிரியாதிருக்கும் கடைசி வினாடியில் கூட திருவருள் சேர்க்கை உண்டாகி, எல்லாம் மாற்றப்பட முடியும்.”
திரைந்த தோலுடைப் பிணி உடம்பும், திருவருள் நிறை சுத்த தேகமாக மாறி விளங்கவல்லதாம். ஆகவே இதனை நம்புங்கள். பிறந்த பிறப்பு இதில் தானே (திருவருளளைல்) நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம், பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே எனப்படுகின்றது.
சிலர் நினைக்கின்றார்கள் ஒருவனுக்கு இந்தப் பிறவியில் அப்படி தெய்வநிலைப் பேறு கிடைக்கும் விதியிருந்தால் மட்டும் அதனைப் பெற முடியும் என்றும், அப்படி விதியில்லாத போது எந்தவிதமான முயற்சி செய்தும் அடைய முடியாது போய், வேறொரு பிறவியில் ஒரு வேளை அச்சித்தி நிலை எய்திடலாம் என்றும் கருதுகின்றார்கள்.
அக்கருத்து உண்மையல்ல. நம் அருட்பெருஞ் ஜோதிபதி எல்லாம் வல்லவர். ஒழிவிலாத் தனிப்பெருங்கருணை ஆட்சி புரிந்து கொண்டே உள்ளவர். எல்லா ஆன்மாக்களையும் பக்குவம் வருவித்துத் தன்மயமாக்கி வாழ்விக்க உள்ளவர்.
அப்படிப் பக்குவம் உண்டாதற் பொருட்டே ஒவ்வொரு ஆன்மாவுக்கும் விதிமுறை செய்துள்ளளைர். அவ்விதிமுறை, திருவருள் வெளிப்படும்வரை, நீங்காது சூழ்ந்து கொண்டேதானிருக்கும். அத்திருவருள் வெளிப்பட்ட கணத்தில், பதியே அனகமுற்று விளங்கும் விநாடியில், அவ்விதியின் செயல் முடிந்துவிட்டதாம்.
ஆகவே, சுத்த சன்மார்கத்தில் அருட் பூரண பதியை, எவரும் எக்காலத்தும் திருவருளளைலே பெறுவது சாத்தியமேயாம். ஒருமையும் தயவும் கொண்டு சத்விசாரமும் பரோபகாரமும் அகமிருந்து அனகம் வரும் போது நம்மில் பதியே நிறைந்து கொண்டு வாழ்விக்க உள்ளளைர்.
எப்போதும் அருள் வழங்கத் தயாராக இருக்கின்ற பதி, அது பெறும்படி முயற்சி செய்விக்கவும் அகத்துணையாய் இருந்து உதவுகின்றார். விதிமுறையின் இரகசியமே இங்குதான் மறைந்து கிடக்கின்றது. ஆன்மாவுக்கு எல்லாவிதமான சூழ்நிலையும் உதவி, அகப் பெரும்பதியை அடைவிக்கவே வந்துள்ளது இவ்விதிமுறை.
ஆகையால், அவ்வகநிலை பெறாதவரையில் இந்த விதிமுறை விட்டொழியவே ஒழியாது. எந்த நொடியில் அவ்வக நிலைப்பேறு கிட்டுகின்றதோ, அதே நொடியில் தானே வினைச்சூழல், விதிமுறையெல்லாம் விலகி ஒழிந்து போகின்றனவாம்.
எனவே, இந்தப் பிறப்பில் ஒருவனுக்குக் கடவுட்பேறு அடையும் விதி இருக்கின்றதோ இல்லையோ எனக் கருதிக் கொண்டு வீணிற் காலம் கழிக்க வேண்டாம். உண்மை அறியும் அறிவு பெற்று அதனை அறிந்து கொண்டும் உள்ள நல்ல ஒரு தருணம் இதுவாகும்.
இத்தருணம், வேறு ஒன்றையும் மதித்து மயங்கிக் கிடக்காது, அருள் விசாரம் செய்து அக அம்பலத்தை அடைந்து, அனகானந்த வாழ்வில் ஓங்குவீர்களளைக.
26. பாடல்
உற்றமொழி உரைக்கின்றேன்
ஒருமையினால் உமக்கே
உறவன்அன்றிப் பகைவன்என
உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும்
அழிந்திடக்காண் கின்றீர்
கரணமெலாம் கலங்கவரு(ம்)
மரணமும்சம் மதமோ
சற்றுமிதைச் சம்மதியா(து)
என்மனம்தான் உமது
தன்மனம்தான் கன்மனமோ
வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம்
என்னொடுசேர்ந் திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும்
சன்மார்க்கம் தானே.
நேர்மையானதையே உங்களுக்கு எடுத்துச் சொல்லுகின்றேன். உங்களுக்கெல்லாம், ஒருமையினால் உறவுடையவனாய் இருக்கின்றேன். என்ன ஒருமை என்றால் ஒன்றான கடவுள் உண்மை பற்றிய ஒருமையாகும்.
அதாவது, கடவுள் ஒருவரே உண்மையாக இருக்கின்றார். அந்த ஒருவர் தானே, கோடி கோடியான ஆன்ம உருவு கொண்டு விளங்குகின்றார் என்ற உண்மையைக் கண்டு கொண்டுள்úளன்.
ஆகையால், நான் ஆக இத்தேகத்தில் இருக்கின்றதும், நீங்களளைகத் தனித்தனி ஒவ்வொரு தேகத்தில் இருக்கின்றதும் பிறராகப் பிற தேகங்களில் இருக்கின்றதும், அந்த அவர் ஒருவரே என்பது உண்மையன்றோ! ஆகையால், நாமெல்லோரும் அக உரிமை உறவு கொண்டுள்ளவர்கள் என்பது உண்மைதானே.
இந்த அக உரிமை உறவு உண்மையை, ஓர்ந்து அறிந்து கொள்ளளைது என்னை ஓர் அயலானாகவோ, மாறுபாடுடைய ஒரு விரோதியாகவோ எண்ணி விடாதீர்கள். உங்களது அறியாமையாலே அப்படி ஒரு வேளை நினைத்தாலும் நினைக்கக் கூடும்.
அப்படி நினைத்து விட்டால் நான் நல்லது சொன்ன போதிலும் உங்களுக்குக் கெட்டதாகப்பட்டுவிடும். அதனால் பணிந்தேற்று அடைய வேண்டியதை அடையாமல் போவீர்கள் என்று கருதி, எனது உள்ளத் தயவால் உருகின்றனன்.
இவ்வுலகில், பிறர் வியக்கக் கற்றுத் தெளிந்து, கலா வல்லுநர்களளைய் விளங்கி இருந்தவர்களும் சரி, கல்லாமலே காலம் கடத்தி விட்டவர்களும் சரி முடிவில் இறந்து ஒழியத்தான் காண்கின்றீர்கள். படித்த மேதையும் படியாத பேதையும் அடைகின்ற முடிவு ஒன்றாய்த் தானிருக்கக் காண்கின்றீர்கள்.
அப்படி இறக்கும் தருணம் என்ன நேருகின்றது என எண்ணிப் பாருங்கள். “அப்பொழுது, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம் சுழன்று, தடுமாறி, கலங்கி ஒன்றிலொன்று மோதிச் சிதைந்து விழுந்து ஒடுங்குகின்றனவாம்.”
இப்படிக் “கரணமெல்லாம் கலங்க வரும் மரணமும் சம்மதமோ” என வினவுகின்றார்.
சம்மதம் என்றாலோ அது அறியாமை. சம்மதமில்லை என்றாலோ அதற்கான வழிவகை கண்டு உய்வு பெற முயல வேண்டும். அப்படிச்செய்யாமல் இறக்கப் பிரியமில்லை என்றோ, மரணத்தை விரும்பவில்லை என்றோ சொல்லிக் கொண்டிருத்தல் மட்டும், அம் மரணம் நீங்கி விடுகின்றது இல்லையாம்.
உண்மை நெறி அறியாமையால், கலக்கமுற்று அழிந்து போகச் சம்மதித்தாலும், நீங்கள் ஒருவேளை சம்மதித்து விடலாம். என் மனம், அதனைக் கொஞ்சம் கூட சம்மதிக்காது. என் மனம் மிக இலேசாகக் கரைந்து போகக் கூடியது. மென்மையானது உங்களுக்குத் தயவில்லை, உள்ளத்தில் உருக்கமில்லை. ஆகையால் கசிந்து உருகாத கன்மனமாய் வன்மனமாய் இருக்கின்றது போலும் என்கின்றார்.
கடினமான கல்லின் மீதும், வன்மையான இரும்பு முதலிய உலோகத்தின் மீதும் எவ்வளவு தண்ணீர் கொட்டினாலும் என்ன? அத் தண்ணீர் கசிந்து உட்செல்லுமா, கல்லையும் இரும்பையும் கரைந்து உருகச் செய்து விடுமோ?
ஒன்றும் பயன்படாதது போல், கடின சித்தர்க்கு, வன் நெஞ்சர்க்கு எவ்வளவுதான் அன்பு உபதேசம் செய்தும் பயன் ஏற்படாதாம்.
நீங்கள் அன்புடையவர்களளைய் இருக்கின்றீர்கள். உங்கள் மனமும் எளிதில் உருகக் கூடியதாயுள்ளது. ஆகவே தான் நீங்களும் சாவைத் தவிர்த்து சதானந்த வாழ்வில் தழைத்திட வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அம்மரணத்தைத் தடுத்திடலாம் அதற்கான உபாயம் எனக்குத் திருவருளளைல் வழங்கப்பட்டுள்ளது. நீங்களும் என்னுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
என்னால், எனது சுத்த சன்மார்க்கமாம் மெய்ந்நெறியால் உங்களுக்கு பெரு நன்மை உண்டாகும். இந்த எனது மார்க்கம் இருக்கிறதே, இறப்பைத் தவிர்க்க வல்ல சுத்த சன்மார்க்கமேயாகும்.
சிற்றறிவும் சிறு வாழ்வும் கொண்டு, இருந்து மறையும் மனித மதியாற்கண்ட மார்க்கங்க்ள எல்லாம், முற்றறிவும், பெரு வாழ்வும் கொண்டு என்றென்றும் விளங்குகின்ற இறையருள் கண்ட சுத்த சன்மார்க்கத்திற்கு சிறிதும் ஒவ்வாது எனத் தெளிந்து கொள்ளுதல் வேண்டும்.
மேலும், மனித நெறியால் கண்ட சித்திகளும், பயனும், அருளளைல் காணவல்ல அற்புத சித்திகளுக்கும், அழியா இன்ப வாழ்வுக்கும் எப்படி ஒப்பு நோக்க முடியும்?
ஆகையால், நான் பெற்ற இன்ப வாழ்வு நீங்களும் பெற வேண்டுமென்று அகநிறை விழைவோடு பலகாலும் அழைக்கின்றேன், வாருங்கள், வந்து என்னுடன் வாழுங்கள்.
27. பாடல்
சன்மார்க்கப் பெருங்குணத்தார்
தம்பதியை என்னைத்
தாங்குகின்ற பெரும்பதியைத்
தனித்தசபா பதியை
நன்மார்க்கத் தெனைநடத்திச்
சன்மார்க்க சங்க
நடுவிருக்க அருளமுதம்
நல்கியநா யகனைப்
புன்மார்க்கர்க்(கு) அறிவரிதாம்
புண்ணியனை ஞான
பூரணமெய்ப் பொருளளைகிப்
பொருந்தியமா மருந்தை
அன்மார்க்கம் தவிர்த்தருளி
அம்பலத்தே நடம்செய்
அருட்பெருஞ்ஜோ தியைஉலகீர்
தெருட்கொளச்சார் வீரே.
பெருங்குணம் என்பதும் பெருந்தன்மை என்பதும், “எல்லாம் வல்ல கடவுளரின் அருள் அல்லது தயவு தான்” ஆகும். இந்தச் சுத்த தயா அருúள கடவுட் குணமாயிருந்து, நம்மையும் அவரோடு இணைத்து வைத்து விடுவதாய் உள்ளது.
இதனால், இது ஒன்றே கடவுளை அடையும் உண்மை நெறியாக, சுத்த சன்மார்க்கமாக கொள்ளப்படுகின்றது. இந்நெறி பயில்வோர் யாவரும் சன்மார்க்க சங்கத்தவர்கúள ஆவர். இச் சன்மார்க்கத்தவர்கள் எல்லாம் தயா பெருங் குணம் படைத்தவர்கúள. என்னைத் தாங்குகின்ற அருட்பெரும்பதி ஒருவரே, சன்மார்க்க சங்கத்து அருளளைளர்களுக்கு எல்லாம் பதியாக உள்ளளைர்.
இந்த என் பதி, தனித்தன்மை கொண்டிலங்குகின்ற சத்திய ஞான சபையிலே, தனித் தலைமைப் பெரும் பதியாக விளங்கிக் கொண்டுள்ளளைர்.
இவர் என்னைச் சிறுபோதே ஆட்கொண்டு, அருள் விளங்கு நல் வழியிலே நடத்தி, சுத்த சன்மார்க்க நண்பர்களுக்கு நடுவிருக்கச் செய்துவிட்டார். அத்தோடு என்னுரிமை நாயகனாகி, என் உட்கூடி, அருளமுதம் பெருகச் செய்தும் உள்ளளைர்.
புறத்திருந்து ஏற்கப்படும் புத்தேள், (தேவர்) அமுதம் போலல்லாது, அகத்திருந்து என்றும் விளங்கும் அருளமுதை அனகத்தே நிரம்பிடச் செய்து ஆக்கையை, அருளின்ப வடிவாக்கி விட்டார், எனது நாயகர்.
இந்த என் நாயகர் அருட்பெருஞ்ஜோதியாய் அம்பலத்தே நடனம் புரிந்து கொண்டிருக்கின்றார். அவரைத் தெரிந்து, தெளிந்து கொள்ளவாரீர், அவர் இப்பொழுது அன்மார்க்கம் தவிர்த்து அருள்கின்றார்.
அல் + மார்க்கம் என்பதே அன்மார்க்கம். ‘அல்’ - இருள் எனப் பொருள்படுவது. அதனால் உண்மை விளக்கம் சிறிதும் இல்லாத, அந்தகாரம் நிறைந்த இருள் நெறி எனப்படுவன, “முன்பு சமய மதத் தலைவர்களளைல் வகுத்து வழங்கப்பட்ட பலப்பலவாகிய மார்க்கங்களளைகும்”
அந்த அந்தகார நெறிகள், அல் மார்க்கமாய், நெறியல்லாத நெறியாய் இதுவரை இருந்து வந்தன. அவற்றில் பற்று வைத்துச் சென்றவர்கள் பட்டனவெல்லாம் உலகம் அறிந்தனவே. இருள் நெறியிற் சென்று முட்டி மோதிக் கொண்டு, வாழ வகை தெரியாது அவத்தைப் பட்டதெல்லாம் உலகம் அறியுமே.
அப்படிப்பட்ட, அன்மார்க்கங்களைத் தவிர்த்து ஒழித்தற் பொருட்டு, அருட்பெருஞ்ஜோதியோடு எனது பதி வெளிப்பட்டு காட்சி கொடுக்கின்றார். அவரிடத்திருந்தே எப்பக்கமும் விரிந்து விரிந்து செல்கின்றது சுத்த சன்மார்க்கமாம், அருட்ஜோதிப் பெரு நெறி. இந்நெறி அகத்திலே இருந்து அனகத்தே விரிந்து பெருகி உள்ளதால், புற உலகத்தார்க்கு விளங்காது இருக்கின்றது.
இதனால் இனியும் அந்தப் பழைமையான இருள் நெறிகளில் சென்று கொண்டிருக்கின்றீர்கள் போலும். நீங்கள் என்ன செய்வீர்கள், பாவம்; உண்மையை எடுத்துச் சொல்லி அவ்விருள் நெறிகளை விட்டு விட்டு ஒளிநெறிக்கு வரும்படியாக அழைத்துச் செல்ல இதுவரை ஒருவரும் முற்படாது இருந்தார்கள். அதனால் நீங்களும் அகம் திரும்பாது புறத்தே அலைந்து கொண்டு, இருந்தீர்கள், இருக்கின்றீர்கள்.
ஆனால், இனிமேல் அப்படி இருக்கமாட்டீர்கள், இருக்கவும் கூடாது. இது ஆண்டவர் கட்டளை இத்தருண முதல் அக நோக்குங்கள். அகத்தே விளங்கும் அருட்ஜோதிபதியையும், அருட்பெருநெறியையும் கண்டு கொள்ளுங்கள்.
எனது அருட்பெருஞ் ஜோதிபதியே ஒரு பெருமருந்தாக உள்ளளைர். அவர் எல்லாப் பிணிகளையும் பிணக்குகளையும் போக்கிடவல்லவர். இறப்பையே ஒழிக்கக் கூடிய அருட் பெரும் அற்புத மருந்தாகவும் இருக்கின்றார்.
அந்தப் பதி மருந்து நல்ல புண்ணியமே திரண்டு ஓருருவானதாகும். உருவானது என்றால், எங்கே நாம் பார்க்கலாமோ என்று கேட்பீர்கள், பார்க்கலாம். ஆனால் புறக்கண்ணால் பார்க்க முடியாது, ஏனெனில், அது பகுத்தறிவுக்கு அப்பாலாய் விளங்குகின்ற சுத்த அருள் ஞானத்தில், பூர்ண மெய்ப்பொருள் வண்ணமாய் அமைந்து விளங்குகின்றதாம்.
ஆகையால், அருள் ஞானக் கண்ணைத் திறந்து, அக அம்பலத்திலே காண வேண்டி உள்ளதாம். எனவே, இம்மருந்து வண்ண, அமுத வடிவாகிய அருட்பெருஞ் ஜோதிபதி புன்மார்க்கர்க்கு அறிதற்கு அரியவர் ஆவார். எதனை இருள் நெறியாக, அன்மார்க்கமாக மேற்குறிக்க நேர்ந்ததோ அதனையே ஈண்டு, மீண்டும் புன்னெறியாக புகலப்பட்டுள்ளதாம்.
புன்மையானது, அற்பம் சிறுமையுடையதும் ஆம் பிறவாகிய உலக மார்க்கங்கள் எல்லாம் புன்னெறிகúள, என தெளிதல் வேண்டும். அந்தப் புன்னெறிகளில் படர்வோர்க்கு ஒருக்காலும் அறிந்து கொள்ள முடியாதவர் நம் அருட்ஜோதிபதி.
அவர்களுக்கு அரியதாய் உள்ள அருட்பெரு மருந்து, நமக்கு மிக எளியதாக இத்தருணம் வழங்கப்பட்டுள்ளதாம். நீங்கள் ஒளி நெறியின் பயன் கொண்டு ஆனந்தித்து வாழ்வதைக் கண்டு பிறரும் தம் அடர் இருள் இடர் நெறிகளை விட்டு விட்டு இங்கு வந்து சேர்ந்து கொள்ளுவார்கள், பெரு நன்மையும் பெற்றுக் கொள்வார்கள்.
28. பாடல்
சாருலக வாதனையைத்
தவிர்த்தவர்உள் அகத்தே
சத்தியமாய் அமர்ந்தருளும்
உத்தமசற் குருவை
நேருறவே எவராலும்
கண்டுகொளற் கரிதாம்
நித்தியவான் பொருளையெலா
நிலைகளும்தா னாகி
ஏருறவே விளங்குகின்ற
இயற்கையுண்மை தன்னை
எல்லாம்செய் வல்லபத்தை
எனக்களித்த பதியை
ஓருறவென் றடைந்துலகீர்
போற்றிமகிழ்ந் திடுமின்
உள்ளமெல்லாம் கனிந்துருகி
உள்ளபடி நினைந்தே.
உலகில் அறிவூட்ட வரும் ஆசான்களளைக, சில மனிதர்களை, இயற்கைப் பொருள்களை, தெய்வ தத்துவ வடிவங்களை, நூல்களைக் கொள்கின்றார்கள்.
இவைகளையெல்லாம் புறக் குருக்களளைகக் கொண்டு சிறிது சிறிது அளவு விளக்கமும், சிற்றியல் அனுபவமும் பெற முடிகின்றனவாம். இவைகள் யாவற்றிற்கும் மேலானதாயும், ஆதாரமாயும், எல்லோருக்கும் பொதுவில் விளங்கும் பரம்பொருளளையும் இருக்கும் ஒன்றே உத்தம சற்குருவாகக் கொள்ளப்படும்.
அந்த உத்தம சற்குருவை புறத்தெங்கும் கண்டு கொள்ள முடியாது. சூழுலக வாசனையை, சகல கேவலப் பற்றுகளை நீக்கிக் கொண்டவர்களின் உள்ளத்திற்குள்úள தான் இந்த உத்தம சற்குரு எழுந்தருளி, சத்தியமாக நித்தியமாக வீற்றிருக்கின்றார். அந்த இடத்தில், அந்த பண்பட்ட உள்ளத்துணர்வில் தான் “காணாது கண்டு கொள்ளப்படுகின்றதாம்.”
அப்படி விளங்கும் அக்குருவை முகமுகமாக, நாமென்றும், அவரென்றும் இரு உருவ நிலையில் கண்டு அனுபவிக்க முடியாது. ஏனெனில் உண்மையில் இரு வடிவம் இல்லை அங்கே.
பரமாகாசப் பரம் பொருளளைய் இருக்கின்ற ஒன்றே சத்தியமாய் உள்ளது. அதுவே இந்தக் குரு வடிவாய்த் திகழ்கின்றதாம். அவ்வருட் பெரும்பதியே நம் குரு, அப்பதியின் அருúள நாம் என்ற ஒன்றாய் ஆகி, அதன் பிரதிபிம்பமே நாமாய்க் கண்டு கொள்கின்றோம்.
இப்படித்தான் உண்மையில் உள்ளது அருட்ஜோதி குரு ஒருவரே. அவரது வெறும் பிரதிபிம்பமாக நாம் தோற்றிக் கொண்டிருக்கின்றோம்.
ஆகவே, எல்லா நிலைகளும் தானாகி விளங்குகின்ற அந்த நித்தியமான பரமாகாசப் பரம்பொருளை நேரடியாகக் கண்டு கொள்ள மனிதனால் முடிகின்றதில்லை. “நாம் (அதன்) தன்மையான (அருள்) உண்மையை உணர்ந்து, அந்த நாம் என்ற அகங்கா, போதம் நீங்கிர அருள் மயமாய் விளங்கும் போது தான் அப் பரம்பொருட்காட்சி அனுபவம் கிடைக்கின்றதாம்.”
ஒன்றான அக வடிவம், எங்கும் தானாய் மன்னியுள்ளது. அதனைச் சூழ்கின்ற அருள் வண்ண காரியப்பாட்டால் எண்ணரிய தோற்றம் கொள்கின்றதாம். இத்தோற்ற நிலை ஏருற (அற்புத அழகுத் தோற்றம்) செயல்படுவது அப்பதி அருúளயாம்.
இந்த இயற்கை உண்மை விளக்கம் செய்து கொண்டு உள்ளிருக்கும் அவர், எல்லாம் செய்ய வல்லபதி, ஆட்கொண்டு எனக்கே தன் வல்லப சக்தியையும் வழங்குகின்றார். என் மூலமாக அவருடைய உறவும், சம்பந்தமும் உங்களுக்கு ஏற்படுவது திண்ணம்.
ஆகையால், நீங்கள் எல்லாம் இவண் அடைந்து உள்ளபடி உணர்ந்து கொண்டு, அவரோடு இரண்டறக் கலந்திலங்கும் சம்பந்தம் பெற்றுக் கொள்ள, உள்ளமெல்லாம் கனிந்து, கனிந்து, உருகியுருகி நினையுங்கள்.
அப்படிக் கசிந்து உருகிக் கருதினால், அக் கருணா நிதியின் காட்சியையும், கூட்டுறவையும் பெற்று பெரு மகிழ்வு கொண்டு விளங்கலாகும்.
சுத்த சன்மார்க்கத்தால் மட்டும், உண்மைப் பதியை உள்ளக் கோயிலில் கண்டு கொள்ள முடியும். கண்டு அவரோடு கலந்து கொண்டு கழியா இன்பில் வாழவும் முடியும்.
உத்தம சற்குருவாகக் கண்டு கொள்ளப்படுபவரும் நம் பதியல்லால் வேறில்லை. அவரது உபதேசம் உலக வாதனையை (அதாவது) உலகைப் பற்றிய மாயா விஷயாதிகளின் சிந்தனைகளை வேரற அழித்து விடும். அவ்வாதனை ஒழிந்தால் தான், உள் விளங்கு பதியின் அனுபவம் என்றென்றும் உலவாது விளங்கும்.
இதுதான் ‘சாருலக வாதனையைத் தவிர்த்தவர் உள் அகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தம சற்குருவாக’ ஓதப்பட்டுள்ளதாம்.
இந்தப் பாடல் “உள்ளபடி நினைந்தே” என முடிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுதான் முதற்பாட்டின் முதலாக “நினைந்து, நினைந்து” எனத் தொகுக்கப்பட்டதாம்.
இந்த அந்தாதி மாலையில் எந்த ஒரு பாடலில் தொடங்கினாலும், முழுச்சுற்றாக நிறைவுற்றே விளங்கும். இது அகண்ட பிரபஞ்ச வட்டத்தில், அகர பதியை நடு வைத்து உகர உயிர்கள் சுற்றிக் கொண்டு இருக்கும், போற்றி வலம் வந்து கொண்டிருக்கும் உண்மையைக் குறிப்பதாக உணர்த்துகின்றதாம்.
எவரும் பதியை நோக்கி உண்மையாகப் பிரார்த்தித்துக் கொண்டால், அருளளைல் அவரை அடைந்து இப்பிரபஞ்சத்தில் ஆனந்தம் கண்டு நிலவலாம்.
ஞான சரியையின் முடிவு
மெய்ஞ்ஞானத்தின் எல்லையாக உள்ளது நமது அருட்பெருஞ்ஜோதிபதியேயாம்.
அந்த ஞான பதியைக் கலந்து ஒன்றி ஆனந்தமாக வாழ்வதே நம் குறிக்கோளளைகும்.
இதை சாதித்துக் கொடுக்கத்தான் இந்த ஞானசரியை தொடுக்கப்பட்டுள்ளதாம்.
இதில் கண்ட பாக்களை ஓர்மையோடு நெகிழ்வோடு ஓதுவதே சரியையாகும்.
ஒருமுறைக்குப் பலமுறையாக ஓதுவதாலும், ஓதக் கேட்டலாலும் மனம் தூய்மையுறும். அதற்கு அவசியம் தயா ஒழுக்கத்தோடு இருந்துவரல் வேண்டும்.
ஓதிய பாட்டின் பொருளுணர்ந்து உள் உருகுதலும் புறத்தில் அன்பு செய்தலும் ஞானகிரியை ஆகும்.
“இதற்கு மேற்பட்ட இரு நிலைகளும், அக அனுபவ வாழ்க்கை நிலைகúளயாம். அவைகளைச் சொற்களளைல் வெளிப்படுத்தற்கு இயலாதாம், ஆனால், அந்நிலைகளைக் குறித்து ஒரு சிறிது புற விளக்கம் மட்டும் குறிக்கலாம்”.
அவை இரண்டு: “ஞான யோக நிலையும்”, “ஞான ஞான” நிலையுமாம்.
“ஞான யோக நிலை” என்பது சுத்த சத்விசாரத்தால், ஞான சபேசரை அகத்திலே கண்டு கலந்து விளங்குதல் ஆகும்.
அப்படி இருந்து கொண்டு, அக உண்மையின் விரிவே சூழ் உலகமெல்லாமாய்க் கண்டு, அகமுடையான் திருவாணைப்படி இவ்வுலகில் ஞானாந்த வாழ்வு நடத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.
இதுதான், ஞானத்தில் ஞானமாகிய பேரின்ப வாழ்க்கை நிலை ஆகும்.
இம்மேனிலை அனுபவத்தில் செலுத்தி நம்மை எல்லாம் வாழ்விக்க வேண்டியே நமது வள்ளலார், இந்த இருபத்தெட்டு பாடல்களையும் அந்தாதி ரூபமாக ஆக்கிக் கொடுத்துள்ளளைர்.
ஒவ்வொரு பாட்டிலும், சத்விசார ஒருமை உண்டாகத் துதித்தலும், உள்ளுணர்ந்து ஒன்றத் தியானித்தலும், அத்தோடு தயவு ஆணைக்குப் பொருந்த உலகோடு ஒத்து வாழப் பழகுதலும் இப்படி இப்படி எனக் குறிக்கப்பட்டுள்ளனவாம்.
பாக்கள் ஞானசரியை ஆகும், “கிரியையும், யோகமும் ஞானமும்” அப்பாக்களின் வழியாகப் பெறப்படும் உண்மையும், அடைவும், அனுபவமுமாம்.
பாக்களை மட்டுமே கண்டு வரைந்து காட்ட முடிவதால் இதற்கு இந்த ஞானசரியை என்ற தலைப்பே வழங்கப்பட்டுள்ளதாகும்.
இதுவே வாய்ப்பறையான செய்தியாய்க் குறிக்கப்பட்டது.
உலகம் இதனை நன்கு ஓதி உணர்ந்து, முயன்று திருவருள் அடைந்து, அது கொண்டு சுத்த சன்மார்க்க இலட்சிய சித்தியாகிய, சுத்த சுகானந்த வாழ்வு பெற வேண்டும் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணையாம்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை”
தயவு