பசித்திரு தனித் திரு விழித்திரு
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின் திறவுகோல்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
தயவு உள்ளம் கொண்ட அன்பர்களுக்கு நமது வள்ளல் தன்னிளையரியாத இந்த மனிதர்கள் கடவுளை எப்படி வணங்கவேண்டும் என்பதனையும் நிலையில்லாத இந்த
தேகத்தை நாம் எவ்வாறு புனித படுத்தி கொள்ளலாம் என்பதனை சற்றே சிந்தித்து ஐயா வடலூர் பெருந்தகை பேரருள் பெருமான்
அருளிய அமுதத்தை ஒரு சிலவற்றை உற்றுநோக்கிபார்ப்போம்
பாடர் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நமஎன் ரிடும்நீறே (அருட்பா)
நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே
தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய்
அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே
விலையறி யாத மணியே விடேலிதேன்வி ண்ணப்பமே (அருட்பா)
அன்பர்களே தயவு உள்ளம் கொண்டநாம் நம்வாயால் பேரருள்
பெருங்கருணை கொண்ட அருட்பெருஜோ தி கடவுளை பாட பாட
வாய் மணக்கும் உள்ளம் குளிரும் பாலும் சோறும் நீ இருக்கும் இடத்திற்கே உன்னை நாடி வரும் எவ்விதத்தில் இதனை பெறலாம் என்று சற்றே நாம் சிந்தித்து பார்ப்போமானால் பிற
உயிர்களை எல்லாம் நமது உறவினர்களாகவும் தாயாகவும் தந்தையாகவும் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவு ம் பாவித்து அவைகளிடமும் அன்பு காட்டி வாழ்ந்து வந்தால் நம்மை எறாநிலையில் ஏற்றி நமக்கு தன்னிலை காட்டுவார். இதில் சிறிதும் ஐயம்மில்லை மற்றும் அலை இல்லாத கடலும் இல்லை
அதுபோல் தொல்லையில்லாத குடும்பம் இல்லை இவற்றை நாம் எவ்வாறு கடந்து கரை சேர்வது நமது ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி ஜீவதயவோடு கடவுளை தியானித்தோம்மானால் கரைசேர்வது உறுதி எனவே அன்பர்களே இந்த பொய் உலக வாழ்க்கையில் கிடைக்கும் அற்ப சுகங்களை பெரிதாக நினைத்துக்கொண்டு இறுமாந்து இருப்பாயானால் உன்னிடம் கடவுள் காரியபடமாட்டார்
ஆகவே அன்பர்களே நாம் எப்பொழுதும் சிற்றின்பங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காமல் பேரின்பம் கொடுக்ககுடிய பசிதவிர்த்தல் தன்னைவிட ஏழ்மை நிலையில் உள்ளவர்க்கு உதவுதல் ஜீவதயவு போன்ற நற்காரியங்களை செய்து வந்தால் நமது சிதம்பரம் இராமலிங்கம் கண்ட ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை கடலாகிய இறைவன் உன் ஊணிலே கலந்து உயிரிலே கலந்து உன்னை இந்த மாயுலகை விடுத்து அவர் தன்னுள் உன்னை சேர்த்துக்கொல்வார் எனவே மனிதர்களே ஜீவகாருன்யத்தோடு வாழ்ந்து நமது வாழ்க்கையை செம்மைபடுத்தி கொல்வோமாக
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின் திறவுகோல்
பசித்தவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
Write a comment