Kovai Siva Prakasa Swamigal
3.3.2013 Madurai Puttuthoppu Speech of Kovai Dhavathiru Sivaprakasa Swamigal கோவை தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகள் சொற்பொழிவு




Koovai_Siprakasa_Swamigal_1.jpg

Koovai_Siprakasa_Swamigal_1.jpg

Koovai_Siprakasa_Swamigal.jpg

Koovai_Siprakasa_Swamigal.jpg

Audio:

8 Comments
Senthil Maruthaiappan
excellent speech, must listen. Thanks to Thiru.Ramanujam Ayya.

"வாழையடி வாழை என வந்த" என்ற பாட்டின் அர்த்தம் இந்த சொற்பொழிவிருந்து தான் தெரிந்து கொண்டேன். புலால் மறுத்தல் அருமையான விளக்கம், இதுவரை கேட்டிறாத விளக்கம். தவத்திரு. சிவப்பிரகாச சுவாமிகளுக்கு என் அனந்தகோடி நமஷ்காரங்கள். இங்கு இவரை சொற்பொழிவின் முலம் அறிமுகப்படித்திய அய்யா இரமானுஜம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

--xxxx-
Friday, June 7, 2013 at 01:47 am by Senthil Maruthaiappan
Anandha Barathi
"கோவை சிவப்பிரகாச சுவாமிகள்" "அன்னதான ஆதீனம்" என்று அழைக்கப்படுபவர் ,அவர் நடத்தும் ராமலிங்கர் தருமபரிபாலன அறக்கட்டளையில் நூற்றுக்கும் மேற்பட்ட தாய் தந்தை அற்ற குழந்தைகளும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களும் உள்ளனர், மேட்டுக்குப்பம் சித்திவளகத்தில் சுவாமிகளின் ஆசிரமம் உள்ளது, இதை இரண்டாவது தருமசாலை அல்லது "சித்திவளாக தருமசாலை" எனலாம்.
Friday, June 7, 2013 at 08:32 am by Anandha Barathi
Daeiou  Daeiou.
அன்னதான ஆதீனம் தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள்,மதுரை புட்டுத்தோப்பில் அமைந்துள்ள திரு நாச்சிமுத்து சுவாமிகள் மடத்திற்கு சொற்பொழிவாற்ற வருகை புரிந்தார்கள்.

மதுரையில் நடைபெற்ற 64 திருவிளையாடல்களில், புட்டு விற்கும் வந்தியம்மை மற்றும் மாணிக்கவாசகரின் பெருமையை உலகுக்கு உண்ர்த்துவதற்காக வைகைக் கரையில் திருவிளையாடல் நடைபெற்ற்து. அந்த வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது, இந்தப் புட்டுத் தோப்பு ஆகும்.

எம்பெருமான், கூலி ஆளாக வந்து, வந்தி அம்மையிடம் புட்டு வாங்கி உண்டு, வைகைக் கரையினை அடைக்காமல், வாளாவிருந்த காரணத்தினால், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனால், முதுகில், கசையடி பெற்றார். அகில உலகிலும் இருந்த எல்லா ஆன்மாக்களிலும் இது பதிவாகியது. மன்னன், வந்திருந்தது யார் என அறிந்தான்.

இங்கு உள்ள சிவன் கோவிலில், மாணிக்கவாசகர் உள்பட நால்வருக்கும் சிலை எழுப்பப் பட்டுள்ளன.

வந்தியம்மைக்கும், இங்கு ஒரு சன்னதி உள்ளது.

இந்த இடங்களுக்கெல்லாம், மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிப்பது, இன்றளவும் நடைபெற்று வருகின்றது.

சரித்திரச் சான்றாக, இந்த இடத்தில், ஒரு சிவன் கோவிலும், அதி அற்புதமான கல் மண்டபமும், உள்ளன.
Saturday, June 8, 2013 at 05:52 am by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
இந்த இடத்தில் கோவை அன்னதான ஆதீனம் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவினைக் கேட்ட மக்கள் / பக்த கோடிகள் அனைவரும் மிகுந்த பரவசமடைந்தனர். வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை பல ஆன்மீக நூல்களுடன் அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் அவர் ஆற்றிய உரை,அனைவரையும், இவர், அடுத்த முறை, மதுரைக்கு எப்போது, வந்து மீண்டும் இது போன்றவொரு சொற்பொழிவாற்றுவாறோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது என்னவோ...உண்மை.

Edit Image
Saturday, June 8, 2013 at 05:58 am by Daeiou Daeiou.
KUMARESAN KRISHNAMURTHY
தகவல் பரிமாற்றத்திற்கு நன்றி ஐயா! வள்ளல் பெருமானாரின் கருத்துகள் தகுந்த அடியார்கள் மூலம் உலகெங்கும் பரவி வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று!
Saturday, June 8, 2013 at 06:09 am by KUMARESAN KRISHNAMURTHY
Kumar Varatharajalu
Sir,
Thanks very much for uploading part 1 and part 2. It is very useful to download and listen while on the move. WOuld you help to upload the final part also, as the discourse seems to stop midway.
May the Grace of Vallalar be with you for this noble service.
Saturday, June 8, 2013 at 16:22 pm by Kumar Varatharajalu
Daeiou  Daeiou.
அன்பரின் தகவலுக்காக....

தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமி அவர்கள் சொற்பொழிவு முழுமையும், இந்த இரண்டு ஆடியோ பைல்களில் அடங்கியுள்ளன.
சுமார் 1 மணி நேரம் என்ற அளவில்தான் அவர்கள் புட்டுத் தோப்பில் கடந்த (2013) மார்ச் மாதத்தில் பேசினார்கள்.

எனவே, அந்த ஆடியோ சொற்பொழிவில், எஞ்சிய பகுதி...என்று எதுவும் இல்லை. (இது தகவலுக்காக...)

தயவு.
Saturday, June 8, 2013 at 16:52 pm by Daeiou Daeiou.
Anandha Barathi
Dear All,
Please must listen our Sivaprakasa Swamigal speech, it very great.
Wednesday, June 26, 2013 at 07:12 am by Anandha Barathi