Srilanka Gnana Sabai Temple
15.1.2011-இலங்கை வேம்பிராய் கிராமத்தில் உழவர் திருநாள் அன்று சைக்கிள்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா நடைபெறல்.

15.1.2011 இலங்கை வேம்பிராய் சத்திய ஞான கோட்டம்.

உழவர் திருநாள் விழாவில்

மாணவ மாணவியருக்கு சைக்கிள்கள்

போரினால் பாதிக்கப்பட்ட

இலங்கை வாழ் தமிழ்

மக்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கியது.

=0=0=0=0=

இலங்கை வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்தில் கடந்த 15.1.2011 அன்று உழவர் திருநாள் விமரிசையாகக்

கொண்டாடப்பட்டது. அதன் பின்னர், இலங்கையில் பள்ளியில் பயிலும் வசதியற்ற மாணவ மாணவியருக்கு 10

சைக்கிள்கள் வழங்கப்பட்டன. சிங்கப்பூரில் வாழும் திரு சிவகுமார் திரு கிருஷ்ணன், திரு கிருஷ்ணன் குட்டி

ஆகியோரும், மீசாலையில் உள்ள ஆர்மி கர்னல் திரு ஹேமந்தா பண்டாரே ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

ஹாங்காங்கிலிருந்து திரு லூயிஸ், லண்டனிலிருந்தும் ஷாங்காய் (சைனா) இந்தியாவிலிருந்து மதுரை வள்ளலார்

சன்மார்க்க பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி, ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

தேவையான சைக்கிள்களையும், தையல் மிஷின்களையும் வாங்குவதற்குரிய தொகையினை, சிங்கப்புரிலிருந்து

அன்பர் திரு சிவகுமார் முன்கூட்டியே அனுப்பி வைத்திருந்தார்.

பள்ளிக்குச் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்ட ஏழை மாணவ மாணவியரை பள்ளிப் பொறுப்பாளர் மூலம் தேர்வு செய்து

அவர்களில் 10 நபர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்ட சைக்கிள்கள்

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருபவர்களை ஆர்மி கர்னல் மூலம்

தேர்வு செய்து தகுதியானவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட தையல் மிஷின்கள்.

சைக்கிள்களையும் தையல் மிஷின்களையும் பெற்றுக் கொண்டவர்களின் சந்தோஷம் அளவிடற்கரியது. அருட்பெருஞ்ஜோதி

ஆண்டவருக்குத் தங்களது நன்றியினைக் காணிக்கையாக்கிச் சென்றனர்.

058

058

063

063