இலங்கை வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்தில் 2012 பொங்கல் திருவிழா நடைபெறல்.
நாட்கள் 15.1.2011 முதல் 20.1.2011 வரை.
=0=0=0=0=
திரு கேத்தீஸ்வரன் அவர் மனைவி திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோரது முயற்சியால், இலங்கை சாவகச்சேரியை அடுத்த வேம்பிராயில் சத்திய தருமச்சாலையும், சத்திய ஞான கோட்டமும் கடந்த 2010 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் திறக்கப்பட்டன.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து அன்பர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு அருள் நலம் பெற்றனர்.
வரும் 15.1.2011 முதல் 20.1.2011 வரை பொங்கல் திருவிழாவின் பொருட்டு, திருவாசகம் முற்றோதல் மற்றும் திரு அருட்பா முற்றோதல் அங்கு நடைபெற உள்ளது.
இவ் விழாவில் வெளி நாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள், தத்தமது பாஸ்போர்ட் ஜெராக்ஸ் நகலினை தமக்கு அனுப்பிவைக்கும்படி அவர் கேட்டுக் கொள்கின்றார்.
இலங்கை அரசாங்கத்தின் Ministry of Defenceலிருந்து (No objection Certificate) பெற வேண்டியிருப்பதால், முன்கூட்டியே பாஸ்போர்ட் நகலினை அனுப்பினால், உரிய நபர்கள் மூலம் அதற்கான விண்ணப்பத்தினை, இலங்கை அரசிடம் அனுப்பி அனுமதி பெற்று வைக்கலாம் என்பதுவே இதன் நோக்கம் ஆகும். எனவே, மேற்படி விழாவில் பங்கு கொள்ள விரும்புவோர், தமது பாஸ்போர்ட்டின் ஜெராக்ஸ் நகலினை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
457
356