இலங்கை கொண்டு செல்லப்படவுள்ள திரு நிலைக் கண்ணாடி வழிபாடு.
இடம்: மேட்டுக்குப்பம்
நாள் 9.8.2010 (திங்கள்)
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=
மேட்டுக்குப்பத்தில் 42வது நாளாக, இலங்கை வேம்பிராய்க்குக் கொண்டு செல்லப்படவுள்ள திரு நிலைக் கண்ணாடி வழிபாடு மேட்டுக்குப்பத்தில் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. திரு அருட்பா முற்றோதல் 9வது முறையாக துவங்கி நடைபெற்றுவருகின்றது. (9.8.2010) திங்கட்கிழமை மாதப் பூச நாளாகையால், பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து வடலூர், மேட்டுக் குப்பத்துக்கு வருகை தந்த சன்மார்க்க அன்பர்கள், திரு நிலைக் கண்ணாடி வழிபடும் இடத்திற்கு வருகை தந்து முற்றோதலில் கலந்து கொண்டனர்.
Write a comment