இலங்கைக்கு கொண்டு செல்லப்படும் திருநிலைக் கண்ணாடி ஊர்வலம் செல்லும் விபரம்.
மேட்டுக்குப்பத்தில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் சித்தி அடைந்த சித்தி வளாகத் திருமாளிகைக்குப் பின்னர் அமைந்துள்ள திருவானைக்கோவில் சன்மார்க்க அன்பர் திரு ஷண்முகம் அவர்களின் சன்மார்க்க இல்லத்தில் திரு நிலைக்கண்ணாடி வழிபாடு நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே, திரு நிலைக்கண்ணாடி வழிபாடு 15.8.2010 அன்று முடிவடைந்த பின்னர் 16.8.2010 அன்று அதனை வள்ளற் பெருமான் வாழ்ந்த இடங்களான மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம், வடலூர் தீஞ்சுவை நீரோடை ஆகிய இடங்களுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
சில நிர்வாகக் காரணங்களினால், திருநிலைக் கண்ணாடி வழிபாடு முடிவடைந்து 14.8.2010 அன்றே மேற்காணும் இடங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. திரு கேத்தீஸ்வரன். மழையூர் சதாசிவம், மற்றும் மூத்த சன்மார்க்க அன்பர்கள் எல்லாம் அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள உள்ளனர் என்ற விபரம் அனைத்து சன்மார்க்க அன்பர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியைக் கண்ணுறும் சன்மார்க்க அன்பர்களும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி கேட்டுக்
கொள்கின்றேன்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக. வள்ளல் மலரடி வாழ்க...
வள்ளல் அடிமை
கேத்தீஸ்வரன் மற்றும் விஜயலக்ஷ்மி, தயானந்தன்.