Srilanka Gnana Sabai Temple
இலங்கை வேம்பிராய்க்குக் கொண்டு செல்லவுள்ள திருநிலைக் கண்ணாடி-மேட்டுக்குப்பத்தில் 48 நாட்கள் வழிபாடு

இலங்கை சாவகச்சேரி வேம்பிராய்க்குக் கொண்டு செல்லப்படவுள்ள திருநிலைக்கண்ணாடி.

மேட்டுக்குப்பத்தில் திரு அருட்பா முற்றோதல் நடைபெறல்.

இலங்கைக்குக் கொண்டு செல்லப்படவுள்ள திருநிலைக்கண்ணாடி வழிபாடு எட்டாவது நாளாக இன்று (6.7.2010)

வழிபாடு செய்யப்பட்டது. அன்பர்கள், திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இலங்கையில் துவக்கப்படவுள்ள சத்திய ஞான கோட்டத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ள இத் திருநிலைக் கண்ணாடியின் முன்னர் திரு அருட்பா

முற்றோதல் நடைபெறுவதால், சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இவ் வழிபாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி மிகுந்த உள்ளுருக்கத்துடன்

வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம்.

வள்ளல் அடிமைகள்.

கனகசபாபதி கேத்தீஸ்வரன் - திருமதி விஜயலக்ஷ்மி கேத்தீஸ்வரன். சுவிட்சர்லாந்து.