Srilanka Gnana Sabai Temple
இலங்கை வேம்பிராய்க்குக் கொண்டு செல்லவுள்ள திருநிலைக் கண்ணாடி-29.6.2010-மேட்டுக்குப்பத்தில் 48 நாட்கள் வழிபாடு துவக்கம்.

இலங்கை வேம்பிராய்க்குக் கொண்டு செல்லவுள்ள திருநிலைக் கண்ணாடி-29.6.2010-மேட்டுக்குப்பத்தில் 48 நாட்கள் வழிபாடு துவக்கம்.

=0=0=0=0=0=0=

இலங்கை சாவகச்சேரி அருகேயுள்ள வேம்பிராயில் கட்டப்பட்டுள்ள சத்திய தருமச்சாலை மற்றும்

சத்திய ஞான கோட்டம் ஆகியவை விரைவில் திறப்பு விழா காணப்பட் உள்ளன. திரு கேத்தீஸ்வரன் மற்றும்

அவரது துணைவியார் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதற்கு முன் நிகழ்ச்சியாக, மேட்டுக்குப்பத்தில் திருவானைக்கோவில் அன்பர் திரு ஷண்முகம் அவர்களுக்குச்

சொந்தமான சன்மார்க்க இல்லத்தில் 29.6.2010 (செவ்வாய்க் கிழமை) அன்று திருநிலைக் கண்ணாடி வழிபாடு

துவங்கியது. அன்று காலை சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் சித்தி வளாகம் சென்று அருட்பெருஞ் ஜோதி

ஆண்டவரையும், திருவருட்பிரகாச வள்ளற் பெருமானையும் மனமுருக வேண்டி, 29.6.2010 ஆரம்பித்து,

48 நாட்கள் கழித்து 17.8.2010 முதல் இலங்கையில் தொடர்ந்து நடைபெற உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் எவ்வித

தங்கு தடையின்றி நிறைவேற்றித் தரும்படி வேண்டிக் கொண்டனர்.

கலந்து கொண்ட அன்பர்கள் விவரம்.

1. திரு ஷண்முகம், திரு அருட்பிரகாச ஒளி நெறி மன்றம், திருவானைக்கோவில், திருச்சி.

2. திரு ஏ.ராமானுஜம், மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன். மதுரை.14

3. திரு ஓ.பி. கருத்தையாத் தேவர், ஏ.கொக்குளம் சன்மார்க்க சங்கம், திருமங்கலம் தாலுகா, மதுரை மாவட்டம்.

4. திரு லக்ஷ்மணன், சன்மார்க்க அன்பர், எழும்பூர், சென்னை. 5. திருமதி லோகாம்பாள், லாலாபேட்டை.

5. திரு அன்பானந்தம், நிறுவனர், சிம்மக்கல் சன்மார்க்க சங்கம், மதுரை

6. திரு பக்தவத்சலம், (உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி சுகுணப்பிரியின் கணவர்)

7. திரு சக்திவேல், வலங்கைமான், திரு அருட்பா பாடகர், திருவாரூர் மாவட்டம்.

8. திருமதி சஞ்சீவியம்மாள், வலங்கைமான், திருவாரூர் மாவட்டம் 9. திருமதி கலாராணி, த/பெ செல்லப்பெருமாள், மேட்டுக்குப்பம்.