தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
எழுபதாம் அதிகாரம்.
சுத்த இன்ப நிலை.
|
8. |
ஆனந்தம் ஆன்மமுடி வாமின்பே மற்றது ஊனந்தங் கெங்கு முறா. |
698 |
குறள் விளக்கம்.
ஆன், ஆன்மப் பசுவைக் குறிப்பது. ஆதலின், ஆனந்தம் என்பது ஆன்மாவின் முடிவு என்றும், அதுவே உண்மையான இன்பம் என்றும் அறியலாகும். இது ஆன்ம நிலையில் இருந்து, அருள் அனுபவத்தால் பெற வேண்டியுள்ளது.
மற்றபடி, சீவ, கரண, இந்திரியங்களின் இடத்து இருந்து இவ்வானந்தம் என்றும் உண்டாவதில்லை. ஆன்மா அல்லாத பிற இடங்கள் எல்லாம் ஊனம் (குறைவு, பங்கம்) உடையனவாம். ஆகையால், சுத்த இன்பானுபவமோடு நித்தியமாய் வாழ்வதே ஆனந்தமாம்.
Write a comment