தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
எழுபதாம் அதிகாரம்.
சுத்த இன்ப நிலை.
|
7. |
ஈத்துவக்கு மின்பமே யின்பம் புறத்திருந் தேற்றுவந் திட்டா விழிவு. |
697 |
குறள் விளக்கம்
அக நிலையிலிருந்து தயவாலே பிறர்க்கு உயிர் விளக்கமும், அறிவு விளக்கமும் செய்து செய்து அகமகிழ்ந்திருப்பதுவே உண்மையான இன்பம்.
அவ்வக நிலை நீங்கி, பொறி புலன் நிலையில் பொருந்தி புறத்தே இருந்து பொருட் போகத்துறுகின்ற விடய சுகங்கள் யாவும் இன்பானுபவம் அல்லம். மாயா போகமே. அவற்றால் உயர்வில்லை. தாழ்வே யுண்டாம். ஆகையால், தேக போகத்தில் பற்றின்றி அகத் தயா இன்ப அனுபவத்திலே ஓங்குதல் வேண்டும்.
இந்த குறள் எனக்கு மிகவும் பிடித்தது.உண்மையான ஜீவகாருணியம் ஆன்ம அகத்தில் இருந்து செய்ய பட வேண்டும் என்பதை குறள் தெளிவாக வெளிபடுத்துகிறது.திருக்குறள் போன்று தயவு குறளை உலக மக்கள் படிக்க வேண்டும்.என் அன்பு குழந்தை சில தயவு குறள்களை தவறு இல்லாமல் சொல்லுவாள்.அவளுக்கு ஒன்பது வயது தான் ஆகிறது.வளர,வளர அவள் அந்த குறள்களின் பொருளை உணர்ந்து கொள்ளுவாள்.சுத்த சன்மார்க்க கருத்துகளை படிக்க தயவோடு கூடிய புரிதல் இருந்தால் போதும்.வயது தடை இல்லை.தயவு.
Sunday, February 27, 2011 at 01:32 am
by aruljeyenthi2000
Write a comment