தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
எழுபதாம் அதிகாரம்.
சுத்த இன்ப நிலை.
|
6. |
தயவான்பே ரியாற்றின் தனிப்பெருக் கீவ(து) அயராமெய் யின்பம் அறி. |
696 |
குறள் விளக்கம்
சுத்த தயா சன்மார்க்கம் ஆகிய பெரு நெறியே தயவு-வான்-பேர்-ஆறு எனப்படும். இவ்வாற்றின் நித்திய வெள்ளம் தனிப்பெருக்காக உள்ளதாம். ஆதலால் இந்த மார்க்கத்தில் செல்லுகின்றவர்கள், என்றும் அயராது (தளர்ச்சியுறாது) குன்றாத மெய் இன்பம் வழங்கப் பெறுவர்.
உலக ஆறுகள் எல்லாம், மண்ணில் தோன்றி, ஏகதேசப் புறவாழ்வு தந்து மாறுபட்டொழிவன, உலக மத மார்க்கங்கள் போல. கடவுளரின் பரமாகாசத்தில் இருந்து தோன்றி, என்றும் பெருக்கெடுத்துப் பாய்கின்றது நமது சுத்த தயா சன்மார்க்கப் பேராறு. ஆதலின் இவ்வாற்றின் பெறுகின்ற நித்திய பேரின்பானுபவம் வேறு எந்த ஆற்றினும் காண்டற்கு இல்லையாம்.
Write a comment