Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.695.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

எழுபதாம் அதிகாரம்.

சுத்த இன்ப நிலை.

5.

அகநிறை இன்ப அருளொளி நம்பன்

யுக(ம்)யுகம் ஈந்தானுலகு.

695


குறள் விளக்கம்


இன்பப் பெருக்காக நமது அகத்தே மறைந்து இருந்து கொண்டு அருட்சோதி வீசுகின்றான் நமது இறைவன். இது இன்று நேற்றல்ல, உலகத் தோற்ற முதலே, யுகம் யுகமாக உள்ள உண்மையாம். இப்படி அகம் இருந்து கொண்டுதான், உலகம் யாவும் ஈந்து அளித்துக் கொண்டுள்ளான்.


இந்த விளக்கம் நமக்கு இந்தத் தேகச் சூழ்நிலையில் இப்பொழுது விளங்குகின்றது. இத்தேகம் இல்லாத போதும் ,

கீழான மற்றப் பிறவிகளிலும், இக்கடவுள் உண்மை, இருந்தும் அறியப்படாது இருந்ததாம். இது சமயம், நம்பன் (நமது பதி. கடவுள்) அருள் வழங்கி உள்ளதால், அதனை அடைந்து, அருளின்பம் உறுவதே நம் கடமையாகும்.