தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
எழுபதாம் அதிகாரம்.
சுத்த இன்ப நிலை.
|
4. |
சுத்தான்மா வாகிச் சுடரு நமைச்சூழ்ந்த அத்தனையும் ஆண்டா னருள். |
694 |
குறள் விளக்கம்
தேகப்பற்றற்று ஆன்ம நிலையத்திருந்து நோக்கும்போது, அவ்வான்மா நித்திய தீபமாகச் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்ற உண்மை உணரப்படும். ஆன்மப் பிரகாசமே ஆண்டவருடைய அருட்பிரகாசமாய் உள்ளது. இப்பிரகாசத்தின் காரியப்பாடே, சீவ தேகாதி பிரபஞ்சம் அனைத்துமாக உள்ளதாம். இவ்வருள் உண்மையை அறிந்து, ஆன்மதற்போதம் நீங்கி, அருட்பணி புரியப் புரியத்தான் ஆனந்தம் உள்விளைவதாம்.
Write a comment