Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.690.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்தொன்பதாம் அதிகாரம்.

சுத்த சன்மார்க்கம்.

10

நினைப்பு மறப்பற்று நீங்கா துளநின்(று)

அனைத்துல காளுமிவ் வாறு.

690


குறள் விளக்கம்


இந்தச் சுத்த சன்மார்க்கமானது, சச்சிதானந்த பதியிடத்திருந்து ஒழிவற நின்று ஒளிர்கின்றதாம். உலகெல்லாம் இவ்வொளி கொண்டு விளங்குகின்றன. ஆதலின், அப்பதியை அறிந்து அடைந்து உடனின்று உலகெல்லாம் வாழ்த்தவும் வாழவும் உதவுகின்றது இவ்வொளி நெறி.


சத்விசாரத்தால் புலையுடம்பின் பற்றற்று, உள்ளொளியின் சுத்த தயவோடு, நினைப்பு மறப்பற நின்று தயா வொளி வீசிக் கொண்டு, என்றென்றும் வாழச் செய்வது இப் பெரு நெறி.