தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தொன்பதாம் அதிகாரம்.
சுத்த சன்மார்க்கம்.
|
9 |
அருளக நின்று அனகவாழ் வாழா மருணெறி யெல்லாம் மயக்கு. |
689 |
குறள் விளக்கம்
அருளுணர்வோடு அகத்திலே பொருந்தி நின்று, அக மலர்ந்து விரியும் அருள் அனக நிறை வாழ்வு வாழ்வதால்தான் உண்மை இன்பம் ஓங்கும். ஆதலின், இவ்வனக அருள் மார்க்கமே சன்மார்க்கமாகும்.
இங்ஙனம் வாழ வைக்காத மருள் மார்க்கங்கள் எல்லாம் உண்மை அல்ல. மருள் நெறி என்றது, மக்களை உலகியலில் மருளச் செய்வது என்றும், மயங்குணர்வில் உதித்து ஒடுங்குவது என்றும், மாயா காரியப் பெரியோர்களின் போத அறிவிற் கண்ட மார்க்கமென்றும் கொள்ளலாகும்.
Write a comment