தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தொன்பதாம் அதிகாரம்.
சுத்த சன்மார்க்கம்.
|
7 |
அயலறியா தெங்கும் அகமுடையா னாளும் செயலறி சன்மார்க்கம் தேறு. |
687 |
குறள் விளக்கம்
ஆன்மாவின் அகத்தே என்றும் இருந்து கொண்டு, உலகெல்லாம் ஆண்டு அருள்புரிகின்ற ஒருவர், நமது அகமுடையான் ஆவர். இந்த நம் தலைவர் ஒருவர் தானே சத்தியமாக உள்ளவர்; தயா பெருஞ் ஜோதியாய் அயலறியாது தனித்து நின்று, எங்கும் தானேயாய் இருந்து ஆள்கின்றார்.
நம் தனியொரு ஆன்மாவில் இவ்வொன்றாம் பதி அனுபவம் பெற்று, அயலறியா நின்று, தயானந்தச் செயலோடு விளங்குவதே இச்சன்மார்க்கத்தின் குறிக்கோளாகும்.
Write a comment