தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தொன்பதாம் அதிகாரம்.
சுத்த சன்மார்க்கம்.
|
6 |
எப்பொழுதும் எவ்விடத்தும் எவ்விதத்தும் மெய்ப்பொருளைத் தப்பவிடா மார்க்கம் தனி. |
686 |
குறள் விளக்கம்
தனித் தலைமைப் பெருநெறியாக உள்ள சுத்த சன்மார்க்கம் ஒன்றே. இரண்டற்ற கடவுள் சம்பந்தத்தை வழங்க வல்லது. ஆதலின், அந்நெறியில் தனித்துச் செல்லுதல் வேண்டும். இம் மார்க்கத்தில் ஒழுகும் வாழ்க்கை ஒன்றில்தான் கடவுள் ஐக்கியம் உண்டும்.
அது எக்காலத்தும், எல்லா இடத்தும், எல்லாச் சூழ்நிலையிலும் நம்மைப் பதியோடு பிரிவற இருத்தி வாழ்விப்பதாகும். இத்தனி நிலையினின்று தவறாது வாழ்பவர் குறிக்கோளை நிச்சயம் எய்துவர்.
Write a comment