Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.685.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்தொன்பதாம் அதிகாரம்.

சுத்த சன்மார்க்கம்.


5

பதிநிலை நீங்கிப் படரு நெறியால்

விதிதலைப் பெய்தி விடும்.

685


குறள் விளக்கம்


உண்மைக் கடவுள் நிலையைக் கண்டு பற்றிக் கொள்ளாது, புலனெறியால் மயங்கிப் புறத்தே மேற்கொள்ளுகின்ற எந்த மத மார்க்கக் கொள்கைகளாலும் பெரு நலம் உண்டாகாது. எந்த மார்க்கத்தில் சென்றாலும், அந்த வழியிலேயே கடவுள் நியதியால் விதி முற்பட்டு வந்து தடுத்து இன்பானுபவத்திற்கு இடையூறு செய்யும்.


அவ்விதியை விதிக்கின்ற பதியை யொன்றி நின்று, தயா இன்ப வாழ்வு வாழ்கின்றவர்களே விதியை வென்று ஆள்வார்கள்.