தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தொன்பதாம் அதிகாரம்.
சுத்த சன்மார்க்கம்.
|
4 |
எம்மதமுஞ் சம்மதமாய் ஏற்று நடந்தாலும் அம்முதலை யொன்றார்க்கில் லை. |
684 |
குறள் விளக்கம்
எந்த பரம்பொருள் எல்லாவற்றிற்கும் முதலாய் சச்சிதானந்தமாய் உள்ளதோ, அந்தப் பரம்பொருளைச் சத்விசாரத்தால் கண்டு கொண்டு அதன் மயமாகித் தயா வாழ்வு வாழாதவர்கள் பெறக்கூடிய பயன் யாதோ ?
அவர்கள் எந்த ஒரு மதத்தையோ அல்லது பன்மதத்தின் திரண்ட கொள்கைகளையோ மேற்கொண்டு பலர் மதிக்க வாழ்ந்தும், வள்ளற் பெருஞ்சோதியின் பேரருளைப் பெற்று பேரின்பமுறாது போய்விடுகின்றனர் அந்தோ !
மூவா முதல்வனையொன்றி ஓவா இன்பில் வாழ பூவார் மக்கள் யாவர்க்கும் இந்நெறியே நன்னெறியாம்.
Write a comment