தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தொன்பதாம் அதிகாரம்.
சுத்த சன்மார்க்கம்.
|
3 |
கடவுளை நோக்கிக் கடுந்தவஞ் செய்தா லடைபடுமே வாழ்வின தாறு. |
683 |
குறள் விளக்கம்
கடவுள் என்று ஒன்று தனியாக, நமது அகத்திலோ அல்லது வேறு எங்கோ புறத்திலோ இருப்பதாகப் பாவித்து அதனை அடைவதற்காகக் கடுந்தவஞ் செய்வதால் என்ன பயன் உண்டாம் ? உலகியல் வாழ்வு தடைபட்டு விளைவின்றிக் கேடுறும். ஆதலின் தடைபடாப் பேரின்ப வாழ்வுக்கு இத்தவநெறி தவறேயாம்.
சுத்த சன்மார்க்கத்தால் கடவுணிலை அறிந்து, அகத்திருந்து தடையுறாத் தயாவியல் விளங்க உலகிதில் வாழ்ந்து எல்லாம் கடவுள் மயமாய்க் கண்டு அன்புத் தொண்டு பூண்டு இன்பு செய்து வாழ்வதுவே நன்றாம்.
உலக மார்க்கங்கள் எல்லாம் மனிதனைக் கடவுளிடத்திற்கே கொண்டு போய்ச் சேர்க்கும் என நம்பிச் செல்லுகின்றவர்கள், மரண வாயிலில் எல்லாம் மறந்து கடவுளனுபவம் பெறாது சென்று விடுகிறார்கள்.
கடவுள் அழிவற்றவர் என்று சொல்லுகின்றவர்கள், அப்பதி அனுபவம் பெற்று வாழ்வதன்றோ சிறப்பு ? அங்ஙனம் வாழ்விக்காத இறப்புறு மத மார்க்கமோ சிறப்பு ?
இதற்கு முற்றிலும் மாறானது சுத்த சன்மார்க்கம். இதில் சத்விசாரத்தால் கடவுளுண்மையை அறிந்து சார்ந்து, சுத்த தயா வாழ்வுற்று அக்கடவுள் அனுபவத்தோடு இறவாது வாழ்வதே லட்சியமாகும்.