தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தெட்டாம் அதிகாரம்.
உபவாசம்.
|
10 |
பூசி னிழியா புரிஉப வாசருக்கு ஏசில் பதவி யிது. |
680 |
குறள் விளக்கம்
வசையற்ற உயர்பதவி எதுவெனில், பிற உயிர்களுக்கு ஒளி செய்தலாகிய பூசனை புரிந்து கொண்டு உபவாசத்தில் இருத்தலாகும். பூசின் இழியாததாவது, அன்பு செய்தலில் குறைவில்லாது, அல்லது இறையறா நிறை தயவு புரிதலாம்.
உண்மை உபவாசத்தால் உறும் பதவி, பூ-சினிழி-யாதது என்றது, ப, த, வி ஆகிய மூவெழுத்துக்களின் மேல் சி, னி, ழி சேர பசி, தனி, விழி என்றாவதால், பூவாகிய சிரநடு ஆயிரம் இதழ் கமலத்தில் பசித்து, தனித்து, விழித்து இருப்பதாகிய பேரின்ப சித்திப் பெரும் பதவி பெற்று வாழலாம் என்பது குறிப்பு.
Write a comment