Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.679.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தெட்டாம் அதிகாரம்.


உபவாசம்.


9

பசிக்க தனிக்க விழிக்க பகரத்

தொசிக்க லறநின் றொளிர்.

679


குறள் விளக்கம்


பகர ஆன்ம பீடமாகிய அம்பலத்தின் கண்ணின்று விலகாது, மடியாது. ஒழியாது ஒருமையோடு இருந்து விளங்கினால்தான், அங்கு தயாஒளி ஓங்க ஓங்க, பசித்திருக்கவும், தனித்திருக்கவும், விழித்திருக்கவும் இவற் இஉறால் பாதிக்கப்படாமலும் திகழ முடியும்.


இப்படிப் பசித்தும், தனித்தும், விழித்தும் இருப்பதுவே உண்மை உபவாசமாம். அருளாலே, ஆன்மா, கடவுளனுபவம் உறும்போது, அக்கடவுளின் சத்து, சித்து, ஆனந்த வாழ்வு பெறலாகின்றது.


ஒசித்தல் = முறிதல், மடிதல், நுடங்குதல்.