தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தெட்டாம் அதிகாரம்.
உபவாசம்.
|
8 |
பரமன் தயவே பசியா யிருக்குஞ் சிரமன் பதத்தித் தெளி. |
678 |
குறள் விளக்கம்.
பசி என்ற ஒன்று சீவர்களை உள் நின்று உடற்றுவதாலே, அப்பசியடங்க உணவு பெற முயல்கின்றது, ஒவ்வொரு ஆன்மாவும். அருள் நியதியாலும், சீவ முயற்சியாலும் ஆகாரம் பெற்று உண்டு வளர்ந்து அறிவு விளக்கமுற்று முடிவில் பேரின்ப சித்தியும் வழங்கப் பெறுகின்றது, தனியொரு ஆன்மாவும்.
ஆதலின், இப்பசியே, கடவுள் தத்துவமாய் உள்ளதாம். நம் தயா சோதிபதியின் திருவடி நமது சிரநடு ஆன்ம நிலையத்தே மன்னியுள்ளது, அதுவே, பகர வடிவ ஆன்ம பீடத்து சிகர சோதியாய்த் திகழ்ந்து, ‘பசி’ என உள்ளதைத் தெளிந்து கொள்வோமாக.
Write a comment