தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தெட்டாம் அதிகாரம்.
உபவாசம்.
|
7 |
உண்டுதுயின் றாலும் உபவாசி நானான்மா கண்டுகொள் ளென்றான் கலன். |
677 |
குறள் விளக்கம்
தேகமும், இதில் திகழும் உண்ணல் உறங்கலாதி செயலும், ஆன்மாவைத் தீண்டுவதில்லை என்றும், ஆன்மாவுக்கு ஊணுறக்கம், பசி, தாகம், பிறப்பிறப்பு கிடையாதென்றும் வீண் வேதாந்தம் பேசுகின்றவர்கள் அக வாழ்நர்கள், உண்மை உபவாசிகள், ஆன்மானுபவிகள் அல்லர். கீழ்நிலையிலுள்ள ஆன்மாக்களாகிய சிற்றணுப் பசுக்களே ஆவர். இந்த ஆன்மாவே கலன் எனப்படுவது.
அக ஆன்ம உண்மை அனகமுறாத போது, உண்டு களித்திருக்கும் இவர்கள் நித்திய உபவாசிகள் என்று சொல்லிக் கொண்டு அலைந்தால் என்ன பயன் ?
தேகப் பற்றற்று, புலன் அவா நீக்கி, ஆன்ம இயற்கையாகிய தயா வண்ணமாய் வாழ்கின்றவர்கள் அன்றோ உண்மையில் உபவாசம் செய்கின்றவர்கள். கடவுளோடு நெருங்கி வாசம் பண்ணுகின்றவர்கள் இவர்களோயன்றோ ?