தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தெட்டாம் அதிகாரம்.
உபவாசம்.
|
6 |
சுத்ததயா வாழ்நரே சோதியுள் ளோங்கியெழ அற்றிடுவ ரூணுறக்க மாங்கு. |
676 |
குறள் விளக்கம்
தயாசோதியில் நிலையான வாசம் பண்ணுபவர்களே அத்தயா ஒளியாலே தாங்கப் பெற்று வாழ்வார்கள். அவர்களுக்குத் தானாகவே உடற்பசியும், துயில் களைப்பும் அருகியொழிய தயா சோதி வடிவிலென்றும் பிரகாசிப்பார்கள்.
சுத்த தயவு என்பது, தான் தயா வண்ண அனுபவம் பெற்று நிலைத்து நின்று சகல கேவலமுறாது இருக்கும் சன்மார்க்கனின் இயல்பாகும். இந்த தயா சோதி நிலைத்தொளிர் இடமே, இராப்பகலற்ற இடம் என்பது.
Write a comment