தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தெட்டாம் அதிகாரம்.
உபவாசம்.
|
5 |
தனுப்பற் றறவறத் தாங்குந் தயவே பனிப்பற் றுபவாசம் பண்ணு. |
675 |
குறள் விளக்கம்
உண்ணின்று தயை வளர வளர உடற்பற்றும். அவ்வுடலின் பசி முதலான மாயா உணர்வும் சிறிது சிறிதாகக் குன்றும். அல்லது தேக போகத்தில் நிராசை உண்டாகி, அக நின்று தயை புரியப்புரிய, அசுத்த மல தேகம், சுத்த சுக உருவாக மாறிப் பேரின்பமுறலாகும்.
ஆதலின், இந்த தயவோடு கூடிய உண்மை உபவாசம் செய்தலே சுத்த சன்மார்க்கத்தினர் மேற்கொள்ள வேண்டிய முறையாகும். இதனால், பிறபிறப்பில் சதா உழன்று சலிக்கும் பனிப்பு அறும்.
தனு = தேகம்.
இந்த குறளின் மூலம் சுவாமிகள் தயவு விரதமே சிறந்தது என சொல்லுகிறார்.தயவை எண்ணாது உடலுக்கு வேண்டிய உணவை கொடுக்காது துன்ப படும் நமக்கு சுவாமிகள் சொல்லுகிறார்.தயவோடு சத்துவ உணவுகளை உண்டு பிற உயிர் களுக்கும் தயவு செய்து தயவு விரதம் செய்தால் நம் உடல் குறைவான உணவையும் உண்டு வாழும் தன்மையை பெறும்.
Sunday, February 6, 2011 at 02:22 am
by P Sujatha
Write a comment