Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.674.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தெட்டாம் அதிகாரம்.


உபவாசம்.


.

உடற்குறக்க மின்றே லுலையுறுஞ் சிந்தை

அடக்குநர்க்கு மில்லை யருள்.

674


குறள் விளக்கம்


தேக கரணங்களும் புலன் உணர்வும் புத்தொளி கொண்டு ஓங்கி வளர உழைப்பும் உறக்கமும் இன்றியமையாதவை. தூக்கத்தை மறுத்து விழித்திருப்பதால், உடல் சோம்பும், புலன் மயங்கும். அருளுணர்வும் நிலைக்காது, இதுவன்றி, பெரும் யோக சாதனையால் சிந்தையை அடக்கி அருந்தவ யோக நித்திரை செய்து சித்தி பெற்றவர்களும், சுத்த தயா விழிப்போடு கையறவின்றி வாழ்வு நடத்தினால் அன்றி அழியாத அருட் பேரின்ப வாழ்வு அடையா முடியாதாம்.