Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.673.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்தெட்டாம் அதிகாரம்.

உபவாசம்.

3

பட்டினி யாலிப் பருவுடல் தீயுறும்

கெட்டிடும் மீறினாற் கேடு.

673

குறள் விளக்கம்

உணவு கொள்ளாது பட்டினி கிடக்கும்போது மூலாக்கினி கொளுவி தேகத்தில் சூடு கிளப்பி வெதுப்புகின்றது. இது ஓர் அளவு அதிகரித்துப் பின்னர் கெட்டழிந்து போம். இதனால் உள் அவயவங்கள் கெடுவதன்றி, தேகமே அழியவும் நேரலாம். ஆதலின், உண்மை அறியாது, பட்டினி கிடந்து தீய்தல் உண்மை உபவாசம் அன்றாம்.

தேகம் = தகிக்கும் தீ உடையது

காயம் = காய்தல், சூடு கொள்ளல் தன்மை கொண்டது.

உடல் = (உடற்றல்) சுடுதல் என்னும் பொருள் கொண்டது.

ஆதலின், தேகத் தீயைக் கொளுத்தும் பட்டினி உபவாசமாகாது. சரீரம் என்பதின் கருத்துக் கொப்ப சூடுந்தண்மையும் அளவோடிருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மை உபவாசத்தில் இருப்போர்க்குத் தயா சோதியின் சேர்ப்பால், சரீரம் கேடின்றி நித்திய சுத்த ஒளி உடம்பாகத் திகழும்.

2 Comments
P Sujatha
உடலுக்கு துன்பத்தை கொடுக்க கூடிய புற விரதங்கள் செய்வதும் தயவுக்கு எதிரான செயல் தான்.இதை தான் இக்குறள் நமக்கு சொல்லுவதை உணருகிறோம்.
உடம்பு ஒரு ஆலயம் என்றே பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.அதுவும் சுத்த தயவு மார்கத்தின் படி புற தேகமும் ஒளி பெற்று உயரிய நிலை பெற வேண்டும்.உண்மையை தேனினும் இனிய தயவு குறளில் யடுத்து சொன்ன தயவு பிரகாசருக்கு நன்றி.
Sunday, February 6, 2011 at 02:08 am by P Sujatha
P Sujatha
உடலுக்கு துன்பத்தை கொடுக்க கூடிய புற விரதங்கள் செய்வதும் தயவுக்கு எதிரான செயல் தான்.இதை தான் இக்குறள் நமக்கு சொல்லுவதை உணருகிறோம்.
உடம்பு ஒரு ஆலயம் என்றே பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.அதுவும் சுத்த தயவு மார்கத்தின் படி புற தேகமும் ஒளி பெற்று உயரிய நிலை பெற வேண்டும்.உண்மையை தேனினும் இனிய தயவு குறளில் யடுத்து சொன்ன தயவு பிரகாசருக்கு நன்றி.
Sunday, February 6, 2011 at 02:09 am by P Sujatha