Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.670.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தேழாம் அதிகாரம்


மருந்து.


10

சுத்ததய வாளர்காண் சோதி மருந்துலகில்

செத்தவரை மீட்டெழுப்புந் தேன்.

670


குறள் விளக்கம்


தயாசோதி மலரில் சுத்த தயா மருந்தாகிய தேன் நிரம்பியுள்ளது. இதனைச் சுத்த சன்மார்க்கத்தால், கண்டு கொண்டு உண்டு மகிழ்வோர்தான், ஆன்ம நிலையினின்று அனகமுற்றுப் பேரின்ப வாழ்வடைகின்றார்கள்


சுத்த மார்க்கத்தால் அக விழிப்படைந்து, ஆன்மா ஆனந்த வாழ்வடைவதே செத்த நிலையினின்று உயிர்த்து எழுவதாகும். ஆகையால், எல்லா மனிதர்களிலுள்ள ஆன்மாக்களும் செத்தே கிடக்கின்றனவாம்.


சுத்த தயவுத் தேனாகிய தயா சோதி மருந்து செத்துள்ள ஆன்மாக்களை எழுப்பவல்லதாம். இச்சுத்த சன்மார்க்க சித்தி பெறுபவர்களே உயிர்த்து எழுபவர்கள், அருட்பிறவி அல்லது ஞானப் பிறப்பு அடைந்தவர்கள். இனி இறவாதவர்களும் ஆவர். இதுவல்லாது, நம் பதி மருந்து உட்கொண்டோர் சர்வ சித்தியும் பெறுவார்கள். ஆதலின், நோய் தவிர்த்தல், இறந்தாரை எழுப்புதல் முதலிய அற்புத சித்திகளையும் செய்ய வல்லவராவர்.


மேலும், இத்தயா சோதி மருந்து, தயவாகிய மந்திரமும், இயற்கை விளக்கமுடைய சோதி ம்ணியும், ஆனந்த அமிர்தமாகிய மருந்தும் இணைந்த ஒன்று. ஆதலின், ஒப்பும் உயர்வும் அற்ற அற்புத மருந்து இதுவாகும்.

P Sujatha
சுவாமிகளே,நாங்களும் அருள் ஞான அற்புத மருந்தை உண்டு தயவு சன்மார்க்க நெறியால் உயிர் பெற தயவாய் வந்து உள்ளோம்.எங்கள் ஆத்மாவை உயிர் பெற செய்வாய் தயவாய்.சுவாமிகளே, உங்களை இக்குறளின் மூலம் தயவாக என்றும் வாழுகிற ஜோதியாக காணுகிறோம்.எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரும்,வள்ளலாரும் எங்களுக்கு இதை வெளி படுத்துகிறார்கள்.இந்த ஒரு சாட்சி எங்களுக்கு போதும்.இதை பற்றி பலரும் என்ன வாதம் செய்தால் என்ன?
Sunday, February 6, 2011 at 03:05 am by P Sujatha