Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.667


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தேழாம் அதிகாரம்


மருந்து.


7

மருந்தின்றி நோய்தீர் வகையொருமை யுள்ளத்

தருளின்றே லுண்டா மஞர்.

667


குறள் விளக்கம்


பக்தியாலும் பிரார்த்தனா தந்திர மந்திர சக்தியாலும், மருந்து ஒன்றுமின்றி பல்வேறு பிணிகளை நீக்குதல் கூடும். இதற்குக் காரணம் உள்ளிருக்கும் கடவுட் சக்தி, மனோ ஓர்மைக்கு ஏற்றவாறு வெளிப்பட்டு நலம் பயப்பதாம்.


ஆனால், அவ்வுள்ளத்தில் பூரண அருள் வெளிப்பட்டுத் தான் என்ற அகங்காரம் நீங்காதவரை, ஒருமை மனோ சக்தியால் கண்ட சித்தி சுகமெல்லாம் குறைபட்டுக் காலத்தே ஒழிந்து போகும். ஆதலின் முடிவில் துன்பமே அன்றி இன்பம் உண்டாவதில்லை.


அஞர் = துன்பம்.