Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.660


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தாறாம் அதிகாரம்.


பொன்னாசை விலக்கு.


10

சிற்றம் பலவர்க்குச் சேர்ந்தபே ரம்பலம்

முற்றும்பொன் னாசையற்று முன்னு.

660


குறள் விளக்கம்


நமது பதி நம் சிற்சபையாம் ஆன்மாலயத்தில் இருந்து கொண்டு, அகண்ட வெளி முற்றும் தன் அருட்பெருஞ் சோதிப் பொன்னொளியை விரித்து, அப்பொன்னொளியிலே அணு முதல் அண்டாண்டங்கள் ஈறாக யாவையும் தோன்றி விளங்கி மறையச் செய்து கொண்டுள்ளார். ஆதலின், அப்பொற்சொதிப் பெருவெளியே நம் கடவுளர்க்குப் பேரம்பலப் பொற்சபையாகும். உலகப் பொன்னாசையை விட்டுவிட்டு, பொன்னம்பலவன் திருவடியைப் பற்றி நின்று பேரானந்தமுறுதல் வேண்டும்.