Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.657.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தாறாம் அதிகாரம்.


பொன்னாசை விலக்கு.


.


7.

மன்னருளால் வாழ்வுறும் வள்ளற்கு மற்றிங்கு

பொன்பொருளா லாவதென் போந்து.

657


குறள் விளக்கம்.


அருள் ஒளிகொண்டு நல்வாழ்வு பெற்று விளங்கும் பேரீகையாளனுக்கு அத்திருவருளே வேண்டியனவெல்லாம் வழங்கிப் பிறர்க்கும் கொடுப்பித்து இன்புறச் செய்கின்றதாம்.


ஆதலின் அவ்வள்ளன்மையுடையோன் உலகச் செல்வப் பொருள்களின் இடத்துப் பற்று அற்று, விருப்பு வெறுப்பின்றி வருபொருள் கொண்டு வாழ்ந்து நிரதிசயானந்தமாய் இருப்பான்.


போந்து = வருவது, வந்து நிறைவது அல்லது பெறுவது.