Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.656.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தாறாம் அதிகாரம்.


பொன்னாசை விலக்கு.


6.

வாதத்தால் பொன்செய்ய மால்கொண் டலைகின்ற

போதற்கு முண்டோ புகல்.

656


குறள் விளக்கம்.


வாதம் என்பது, வாக்குவாதம், ஏமாற்றுச் சொல் முதலிர்யன அல்லாது தாமிரம் முதலிய கீழ்த்தர உலோகங்களைத் தங்கமாகச் செய்கின்ற இரச வாதத்தையும் குறிப்பதாம். இவற்றால் எல்லாம் பொன் பொருளீட்டிக் குவிக்க மிக்க ஆசை கொண்டவர்களுக்குத் தற்;போதம் நிறைந்த அகங்கார அழிவாழ்வே சார்வதன்றி, அப்போதம் ஒழிந்த அருள் வாழ்வு சேர்வதில்லை. வாத சித்தியால் அளவில்லாப் பொன்னே பெறினும் அழிவில்லா இன்பம் பெறுதல் கூடாவாம்.


மால் = பேராசை.

P Sujatha
daeiou
Wednesday, January 5, 2011 at 07:37 am by P Sujatha