Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.654.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தாறாம் அதிகாரம்.


பொன்னாசை விலக்கு.


4.

பொன்வேண்டி யிவ்வுலகிற் போக்கேலநீ காலமெல்லாம்

மன்னீண்டு கண்டு மகிழ்.

654


குறள் விளக்கம்


உலக வாழ்வுக்குப் பொன் பொருள் இன்றியமையாததுதான். ஆனால் அதற்காக அதிலே பேராசை கொண்டு. அப்பொருளைச் சம்பாதிப்பதிலும், சேகரித்து வைப்பதிலும் வாழ் நாள் எல்லாம் கழித்தால், நாம் பெற வேண்டிய அருளின்ப வாழ்வு பெற முடியாது போகும்.


ஆகவே கடவுளின்ப வாழ்வே குறிக்கோளாகக் கொண்டு அருள் நன்முயற்சியால் கிடைக்கப் பெறுகின்ற பொருளைக் கொண்டே அன்பின்ப நெறியில் நடந்து பெருநலம் பெறுதல் முறையாகும்.