தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தாறாம் அதிகாரம்.
பொன்னாசை விலக்கு.
|
1. |
செல்வத்துட் செல்வம் திருவளர் சுத்ததயை சொல்சொன்னத் தாசை சுடு. |
651 |
குறள் விளக்கம்.
பெண்ணாசையான புலனின்பத்தில் அவா அற்றிட்டால், போகப் பொருட்களில் ஆசையும் ஒழிக்க நேரும். இப்பொருள் ஆசையே பொன்னாசையாக உள்ளதால் அதனையும் நீக்கிடல் வேண்டி இவ்வதிகாரத்தில் வைத்தோதப்பட்டுள்ளது.
சுத்த தயை விளங்கு பொன்னான மனத்தில் வளர்கின்றது, கடவுள் திருவாம் மாற்றறியாத பசும்பொன். இதுவே உலக செல்வங்களுக்கு எல்லாம் மேலானது. பெரிய இன்பத்தைப் பெறச் செய்வது. ஈதல்லாத, உலகத்தார் போற்றிப் புகழ்கின்ற பொன்னால், ஆசை விலக்காதார்க்கு, கலகமும் துன்பமுமே உண்டாம்.
சொன்னம் = பொன், சுவர்ணம்.
Write a comment