Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.649.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தைந்தாம் அதிகாரம்.


பெண்ணாசை விலக்கு


9.

புலக்கண்ணாற் பொய்க்கலையிற் புக்கழுந்தா லாடத்

தலர்க்கண்ணாற் காண்க அருள்.

649


குறள் விளக்கம்


புருவ மத்தியில் மலர்கின்ற மெய்ஞ்ஞானக் கண்ணாலே, கடவுள் அருளுண்மைத் திருச் செயலை காண்பதுவே மெய்க்கலையைக் கற்றலாகும். மற்றபடி புலந்தரு கட்பொறியால் மயல்தரு பொய்க்கலை கற்று, அதில் ஆழ்ந்து அமிழ்ந்து கெடுதல் அறியாமை, மயங்கிடு புலக்கண்காட்சி, அவாமன அனுபவச் சிற்றின்பமாம் பெண்ணாசையின் பாற்படும். அருட் கண்காட்சியே கடவுளனுபவமாம் பேரின்பம்.