Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.646.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்தைந்தாம் அதிகாரம்.

பெண்ணாசை விலக்கு


6.

புலனாசை நீங்காது பூவையரைத் தூற்றி

விலகிடல் என்னோ விளம்பு.

646


குறள் விளக்கம்


தயவு சோதி அனுபவம் பெற்று சுத்த இன்பில் வாழ வேண்டிய மனிதன், புலபோக இச்சையில் மூழ்கிக் கிடப்பதாலும், அல்லது, அப்புலனவா நீங்காது, பெண்டிரை இழித்துக் கூறி விட்டு விலகி வாழ்வதாலும் என்ன இன்பம் கிடைக்கும் ?


ஆதலால், இச்சையின்றி கடவுள் தயவு ஒன்றே லட்சியமாகக் கொண்டு உலகியலில் வாழ்வதுவே யாவருக்கும் நன்மை பயக்கும் இன்ப நெறியாகும்.