Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.643


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.



அறுபத்தைந்தாம் அதிகாரம்.


பெண்ணாசை விலக்கு


3.

பெண்ணாசை நீங்கா பிறகட்டுப் பாடெல்லாம்

மண்ணாக்கு மின்பில்லை வாழ்வு.

643


குறள் விளக்கம்


பெண்ணாசையாம் சிறு இன்பத்தில் இச்சை விலக்கிடாது புறத்தே மேற்கொள்ளுகின்ற குடும்பக்கட்டுப்பாட்டுத் தந்திர சாதனைகள் யாவும் வாழ்வை மண்ணாக்கி யொழிப்பனவேயாம். இவற்றால் மிகுவது துன்பமே அல்லாது உண்மை இன்பம் அல்ல.


ஆகையால், சுத்த சன்மார்க்கப் பயிற்சியால் சிறு இன்பத்தில் ஆவலற்று, பேரின்ப வாழ்வில் லட்சியம் வைத்து உலகியலை நடத்தினால் நன்மை பல உண்டாம்.