Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.642.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்தைந்தாம் அதிகாரம்.

பெண்ணாசை விலக்கு

2.

பொறிவாயி லைந்தின் புணர்போகம் பெண்ணாசை

வெறிகொள்ளா நின்றுள் விலக்கு.

642


குறள் விளக்கம்


இத்தேகத்திற் பொருந்திய ஐம்பொறிகளில் உண்டாம் புலனின்ப அவா மிகுதியே பெண்ணாசை எனத் தெளிவிக்கப்படுகின்றது.


“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்

ஒண்டொடிக் கண்ணே யுள” என்ற திருக்குறளால் உண்மை தெளியலாம்.


ஆதலின் இப்புலனிச்சையில் நிராசை உண்டாக, உள் நின்று புற போலத்தில் மிக்க அவா கொள்ளாது விலக்கிடல் வேண்டும்.


வெறி = ஆசை மிகுதியின் விளைவு.


நின்றுள் = உள் நின்று


அகத்தயா அனுபவம் ஓங்கப் புறப்புணர் போகப் பற்றறல் வேண்டும்.