தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்து நான்காம் அதிகாரம்.
மண்ணாசை விலக்கு.
|
10. |
பொதுவுடமை யாதி பூதான மெல்லாம் நிதமடைய மண்ணாசை நீக்கு. |
640 |
குறள் விளக்கம்
தயாசோதி அகத்தே ஓங்குகின்ற காரணத்தால் அது வெளிப்படுவதற்கு என்றே புறத்தே. பொதுவுடமை, பூதானம், அகிம்சை, சர்வோதயம் முதலியன தோன்றி உள்ளொளியை வளர்க்கின்றன. பூரண தயாசோதி வெளிப்பட்டு பேரின்பம் நல்குதற்கு மண்ணாசை ஒழிக்கப்படல் வேண்டும்.
மண்ணாசையற்று சீவதயை பெருகத் தினமும் வாழ்வதால், மண்ணுடம்பு தயா ஒளி உடம்பாய் மாறி நித்தியானந்த வடிவாய்த் திகழும்.
நிதம் = நித்தம், அழியா வாழ்வு.
Write a comment