Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.636


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்து நான்காம் அதிகாரம்.


மண்ணாசை விலக்கு.


6.

சிலையுந் நிழலுருவுஞ் சித்திரமும் மண்ணார்

புலையுடம்பின் பற்றுதரும் பொய்.

636


குறள் விளக்கம்


மண்ணான புன்புலால் ஆக்கையின் மீது ஆசை அறவும், அக மெய் வடிவில் உள்ளம் நிலைக்கவும் வேண்டின், புறத்தோற்றம் அளிக்கின்ற எந்த உருவின் மேலும் பற்று வைக்கப்படாது.


சிலை முதலான ஓவியங்களும், நிழலுருவத் தோற்றங்களும் (Photo. pictures etc) அழகிய சித்திர வடிவங்களும், மனோ கரண கற்பனா பொய்த் தோற்றங்களும் உள்ளத்தைக் கவர்ந்து கெடுப்பதும். உண்மையை மறைப்பதுமாகிய பொய்க்காட்சியேயாம். இந்தப் புறத் தோற்றப் பொய்யில் விளையும் மனோ மகிழ்ச்சியும் நிலைப்பதில்லை. இது மண்ணாசையில் வருகின்ற மயக்கச் சிறு இன்பமே.