தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்து நான்காம் அதிகாரம்.
மண்ணாசை விலக்கு.
|
5. |
அருளொளி யொன்றே அழியா வடிவாம் தெருளுக மண்ணாசை தீர்ந்து |
635 |
குறள் விளக்கம்
தேக உணர்வுக்கு அப்பால் உள்ளது அருளறிவாகிய ஒளிநிலை. சத்விசாரத்தால், அழிவுறும் தேகநிலை கடந்த, அழிவற்ற அருள் ஒளி நிலைனைக் கண்டு கொள்ள முடியும். அப்படிக் கண்ட அருள் ஒளியைப் பெருக்கி நம் வடிவாக்கிட மண்ணுடலாசையை ஒழித்திடல் வேண்டும்.
தேகப்பற்று நீங்கினால் அன்றி, திருவடிப்பற்றாகிய அருளொளி அனுபவம் தெருட்டப் பெறல் கூடாது.
Write a comment