Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.632.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்து நான்காம் அதிகாரம்.


மண்ணாசை விலக்கு.



2.

பருவுடற் கூறுமிகும் பாரே யதனா

லுருவுடம் பாசை யொழி.

632


குறள் விளக்கம்


பருவுடல் = தூல தேகம்.


இவ்வுடலிலே அதிக பாகம் மண்ணின் பகுதியாய் உள்ளது. அதாவது, இத்தேகத்தில் தோல், தசை, நரம்பு, எலும்பு, உரோமம், நகம் யாவும் மண் பூதத்தின் விளைவே. இது தோன்றி வளர்ந்து அழிந்து ஒழிந்து போவது. ஆதலால் இத்தேகத்தினிடத்து பற்று வைத்தல் கூடாது. அழியாத அகப் பெருஞ் சோதியை சுத்த தயவால் பற்றிக் கொண்டு, அதுவே மெய்யாக ஆக்கப் பெற்றாலே பேரின்பம் உற்றவராவோம்.