Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினமும் ஒரு தயவுக்குறள் எண்.626

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்து மூன்றாம் அதிகாரம்.

உலகந் துறவாமை.

6

மறவாமை வேண்டிடின் வள்ள லருளைத்

துறவாமை வேண்டித் தொழு.

626

குறள் விளக்கம்

கடவுள் அருள் உண்மையை உள்ளத் தொருமையில் கண்டு கொண்ட பின், அது நிலைத்து எக்காலும் விளங்குவதற்கு அந்நிலையிலிருந்து கொண்டே உலகில் வாழ்தல் வேண்டும். பிற உயிர்க்கு அன்பு செய்வதாலே, உள் உதித்த அருள் ஒளி, விடாது பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.

உலகைத் துறந்து கடவுளைப் பிரார்த்தித்தால் மட்டும், அகங்கண்ட ஒளி ஒழியாது நிலைத்திருப்பதில்லை. ஆதலின், புறத் துறவு பூண்டு ஒடுங்கிடாது, அகத்தே பணிவும் புறத்தே தயவு வளர் பணியும் புரிந்து கொண்டிருத்தல் வேண்டும்.

தொழுதல் = அகத்தே பிரார்த்தித்தல், புறத்தே பணிந்து தொண்டு செய்தலுமாம்.